அரசு, அரசன் என்று ஒரு காலத்தில் நம் ஆண் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதுண்டு. இன்று இது சற்று குறைந்து விட்டது. ஒரு வேலை அரசியலில் உள்ள வெறுப்பின் காரணத்தாலோ என்னவோ.
விக்கிபீடியா தளத்திலிருந்து சில துளி :
தமிழில் ஆண் சிங்கத்தை குற்றாலக் குறவஞ்சியில் அரிமா அல்லது ஏறு என்றும், பெண் சிங்கத்தை சிம்மம் என்றும் கூறுவது வழக்கம். ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்
மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றி
முந்நீர்க் கடனஞ்சை யுண்டார்க் கிடம்போலு முனைசேர்சீயம்
அன்னீர் மைகுன்றி யழலால் விழிகுறைய வழியுமுன்றிற்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே.
சீயம் என்றால் சிங்கம் பொருள். சிவப்பு நிறம் கொண்டதாக இருப்பதால் அதற்க்கு அப்படி பெயர் வந்திருக்க கூடும். பின்பு திரிந்து சிம்மம் ஆனது .செகு (அழித்தல்) என்ற சொல்லிலிருந்து வந்திருக்கக்கூடும் என்பது மொழியாராய்ச்சியாளர்களின் கூற்று.
இவை ஒரு புறமிக்க இந்த பொருள் கொண்ட தமிழ் அல்லாது மற்ற பெயர்களை சூட்டுவது
வழக்கமாகிவிட்டது. ஆனால் அதற்க்கு எல்லாம் வித்திட்டது தமிழே.
சிங்கம் கர்ஜிக்கும் போது அர் அர் அல்லது உர் உர் என்று ஒலி எழுப்புவது உண்டு. காட்டுக்குள் மிகுந்த ஆளுமை உள்ளதால் 5 அறிவு படைத்த மிருகத்தை இன்று மனிதனை புகழ்வதற்கு உபயோகிக்கிறோம். அவ்வாறு தான் அரி, அரவு, அரசு, அரையன், அரைசன். அரசன் மற்றும் அரசு என்ற சொற்கள் முளைத்திருக்கக்கூடும்.
பின்பு காலப்போக்கில் இது ராசன், ராசா, ராஜா , ராஜு, ராஜ், ராயுடு, ராயலா , ராய், ராயல், ஏரியல்(Hebrew), என்று பல சொற்களாய் திரிந்தது.
தமிழ் முதன்மையானது என்றால் ஆங்கிலத்தில் சம்மந்தமே இல்லாமல் லயன் என்கிறார்களே, அது எங்கிருந்து வந்தது என்று நீங்கள் கேட்பது புரிகிறது,இது லியோ என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்தது என மொழியாராய்ச்சியாளர்களின் கருத்து. இதுவும் தமிழ் சொல்லே.யாளி என்பது தென்னிந்திய கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம். இது இரண்டு எழுத்து சொல் என்பதால் எவரேனும் யாளியாளியாளி என்று கூவினால் லியோ எம்பதுபோல் இருக்கும். இந்த லியோ தான் ஆங்கிலத்தில் லயன் என்று திரிந்தது.
கோள் இபம் கயம் மூழ்க. குளிர் கயக்
கோளி. பங்கயம். ஊழ்கக் குலைந்தவால்;
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி. ஏய்.
ஆளி பொங்கும். அரம்பையர் ஓதியே
Leo(Latin)
Leonardo
Lion(Eng/French)
Asad(Arabic)
Sinha(Bengali/Gujarati/Kannada/Marathi/Nepali)
leeuw(Dutch)
leijona(Finnish)
liontári(Greek)
Archon(Greek)
Sher
oroszlán(Hungarian)
Ljón(Icelandic)
Indonesian(Singa)
leon(Spanish/Irish)
Leone(Italian)
Saja(Korean)
Simham(Malayalam)
Lew(Polish)
Leao(Potuguese)
Leu(Romanian)
Lev(Russian)
Lejon(Swedish)
Singto(Thai)
Aslan(Turkish)
Llew(Welsh)
செம்மொழியான தமிழ் மொழியாம்
உலக மாந்தரெல்லாம் ஒரு தாய் வழியினர் என்பது மாந்தனூலால் தெரியவருவதால், அவர் வழங்கிவரும் பல்வேறு மொழிகளும் ஒரு தாய்வழியினவாய்த்தா னிருத்தல்வேண்டும். இடத்தாலும் காலத்தாலும் நெட்டிடைப்படப் பிரிந்துபோன அம் மக்களின் மொழிகள் பல்வேறு வகைகளில் வளர்ந்து திரிந்து மூலமொழியின் வேறு பட்டும் மாறுபட்டும் உள்ளன. ஆயினும், ஆய்ந்து நோக்கின், உலகமொழி கட்கெல்லாம் மூல நிலையான ஒரு மொழி உண்டென்பது புலனாகும். - பாவாணரின் கூற்று
Sunday, 4 June 2017
Monday, 27 March 2017
வியாழனும் Thursdayum
தமிழர்கள் நாகரீகத்தில் மட்டும் அல்ல, பகுத்தறிதலிலும் முன்னோடிகளே.
வியாழக்கிழமையை உலகத்தில் அநேக மொழிகளில் குரு, ஜுவே மற்றும் ப்ரஹஸ்பதி என்ற சொற்களை சார்ந்து பெயரிடப்பட்டிருக்கும்.
கிழக்கு ஆசிய பகுதிகளில் மற்றும் மத்திய கிழக்கு பகுத்தலில் சற்று வேறுபட்டு இருக்கும்.
தொர்ஸ், குரு, ஜூவி மற்றும் ப்ரஹஸ்பதி இவை இணைத்தும் கடவுளை சார்ந்த பெயர்களே. பிரம்மன், சரஸ்வதி, கடவுளின் அரசர், ஆகாயத்தின் கடவுள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மனித ஆற்றலை வெளி கொண்டு வந்து இன்று பல தொழில்நுட்ப வளர்ச்சிகளை பெற்றிருந்தும் இதன் பெயர்களின் பின்னணியை ஆராயாமல் இந்த பெயர்களை ஏற்று பயன் படுத்தி கொண்டிருக்கிறோம்.
The Korean/Chineese Connection
வியாழ கிழமையை கொரிய மொழியில் மோக்-யோ-இல்(목요일) என்று அழைப்பர்.
இல் என்பது கதிரவனையும் தினத்தையும் குறிக்கும். தமிழிலும் எல்(எல்லோன் ) என்றால் கதிரவனையும் நாளையும் குறிக்கும்.
மோக் என்றால் கொரியா மொழியில் மரம் மற்றும் மரக்கட்டையை குறிக்கும். இதை மொக்கை/மொக்கு என்ற தமிழ் சொல்லிலிருந்து தெரிந்ததே. மரமானது ஆகாசத்திற்கு அப்பால் படர்ந்து இருக்கும் எளிதில் பற்றிக்கொள்ள கூடிய ஒரு வித காற்றிற்கும் மூல காரணம் என்று பண்டைய சீனர்கள் நம்பினர்.
பகுத்தறிவு இருப்பது போல் தெரிந்தால் சீன நாட்டின் முன்னோடிகளை பாராட்டத்தான் வேண்டும்.
இப்பொழுது தமிழுக்கு வருவோம்
வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு வேறுபாட்டுடன் வியாழன் என்று அழைக்கிறோம்.
வியல் + ஆழம். வியல் என்பது அகலம் மற்றும் விரிவை குறிக்கும். ஆழம் என்பது விட்டத்தை குறிக்கும். இதனை நிரூபணம் செய்யும் வகையில் செயற்கை கோள்களை அனுப்பி பல் வேறு தொழில்நுட்பங்களின் உதவியோடு பின் வரும் தகவலை சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டு உள்ளது.
Jupiter is the largest planet in the solar system. It is approximately 143,000 kilometers (about 89,000 miles) wide at its equator. Jupiter is so large that all of the other planets in the solar system could fit inside it. More than 1,300 Earths would fit inside Jupiter.
அகண்டு விரிந்து மிகுந்த ஆழத்துடன் காணப்படுவதால் பகுத்து அறிந்து மொழிகூற்றுகளை வழங்கி சித்தர்களாய் பகுத்தறிவாளர்களாய் விளங்கிய தமிழர்கள் வியாழன் என்று அழைத்தனர் .
இடம் பொருள் ஏவல் கருதி இன்று அதிகம் பயன்படுத்தாமல் போயினும் வியாழன் என்று எவரேனும் அழைத்தால் மதித்து ஏற்று கொள்வோமே!! மனிதநேயத்துக்கே முன்னோடிகளாவர் நம் தமிழர்கள்.

Chip/Shipum சிற்பமும்
Ship(ஷிப்) என்னும் ஆங்கில சொல்லின் பயன்பாடு இரு வேறு அர்த்தங்களால் அறியப்படுகிறது.
ஆங்கிலத்தை கொண்டு இதன் அர்த்தத்தை அறிதல் என்பது இயலாத ஒன்று. காரணம் இது தமிழில் இருந்து வந்ததே.
முதலில் நமக்கு தெரிந்த Ship(ஷிப்) என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இது ஜெர்மானிய சொல்லாகிய ஸ்கப்பா என்னும் சொல்லில் இருந்து வந்தது என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. இது கப்பல் என்னும் தமிழ் சொல்லில் இருந்து வந்ததே.
இப்படியிருக்க Friendship என்கிறோமே, நட்புக்கும் கப்பலுக்கு என்ன உறவு?
Friendship இல் வரும் Ship என்பது ஒருவரது திறமையை குறிக்கும். இது சிற்பம்/சிற்பி என்னும் தமிழ் சொல்லில் இருந்து வந்ததே. சிற்பத்தை வடிவமைப்பவன் சிற்பி. தேர்ந்த ஒருவரால் மட்டுமே சிற்பத்தை வடிவமைக்க முடியும். எனவேதான் என்று பின்னொட்டாய் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள். பின்வரும் ஆங்கில சொற்களில் வரும் Ship திறனையே குறிக்கும்

- flagship.
- hardship.
- township.
- lordship.
- kingship.
- starship.
- headship.
- wardship.
Tuesday, 7 March 2017
ஓசையற்ற ரகரம் (The Silent 'R' in Girl)
ஆங்கிலத்தில் அநேகமான சொற்களில் R என்னும் எழுத்து silent என்ற பெயரில் ஓசையற்று உச்சரிக்கப்படுவதில்லை.
ஒரு உதாரணத்திற்கு Girl ஐ எடுத்துக்கொள்வோம்.
நம்மில் முதன் முதலில் ஆங்கிலம் படிப்பவர்கள் கேர்ள் என்று உச்சரிப்பர், அப்படி உச்சரிக்கும் போது அது கேர்ள் இல்லை, கேள் என்று சரி செய்வது உண்டு. இதன் பின்னணி தான் என்ன? வினவினால் அதெல்லாம் அப்படிதான் என்று அறியாமையால் நம் வாயை அடைத்துவிடுவார்கள்.
Girl என்பது gurwilon என்ற மூல ஜெர்மானிய சொல்லிலிருந்து வந்தது என்று மொழி ஆய்வாளர்களின் கருத்து. இது குருளை என்னும் தமிழ் சொல்லிலிருந்து திரிந்து சென்றதே.
தமிழில் ஒருசார் விலங்கினகுட்டிகளையும் இருப்பால் இளம் குழந்தைகளையும் குருளை என்று அழைப்பது வழக்கம். இதன் மூலச்சொல் குறு/உரு ஆகும். வேர் சொல் உல் ஆகும். பின்பு என்று திரிந்து ஆங்கிலத்தில் சென்று இன்று சிறுமிகளை அழைப்பதற்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்.
பின்வரும் குறுந்தொகை பாடல் இதன் பயன்பாட்டை எடுத்துரைக்கும் ஒரு சான்று.
குறுந்தொகை பாடல்: 47 (கருங்கால்)
தோழி கூற்று
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.
ஆக நம் மொழியிலிருந்து திரிந்து இன்று அறையும் குறையுமாக அண்மையில் முளைத்த மொழிக்கு இதுதான் உச்சரிப்பு என்று நமக்கே பாடம் கற்ப்பிக்கின்றனர். தோற்ற வடிவத்தை மாற்றினாலும் கொண்டையை மறைக்க மறந்து விட்டனர். அதனால் தான் இன்று கேள் என்று உச்சரித்தாலும் கேர்ள் என்றே எழுதுகின்றனர்.
இனி யாரவது கேர்ள் என்று உச்சரித்தால் எல்லி நகையாடாமல் பணிவாகவே திருத்தலாமே.
தமிழ் என்னும் திரைக்கடலில் திரவியம் தேடி மீண்டும் ஒரு பதிவில் சந்திப்ப்போம்.
- அன்புக்குமரன் எத்தியரசன்
Friday, 2 December 2016
செயல்பாடு மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னோடிகள் ( Senior Most Functional and Technical specialists)
Functional/Technical மென் பொருள் சார்ந்த துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட சொல்லாகும்.
Technical:
இப்பொழுது Technical என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.
இதற்க்கு எப்படியோ சமஸ்க்ருதம் வரை சென்று வேர் சொல் கண்டறிந்துவிட்டார்கள் மேற்கத்தியர்கள். அது தமிழிலிருந்து(தச்சன் ) திரிந்து சென்றதுதான். அதனால் தான் எழுதும் பொழுது தெச்சனோ என்று எழுதி வாசிக்கும்போது டெக்னோ என்று வாசிக்கின்றோம்.
ஜங்க்கொல்லர்களில் ஒரு வகை கொல்லன்தான் மரக்கொல்லன். மரக்கொல்லனை தச்சன் என்றும் அழைப்பர். முதன் முதல் தோன்றியவன் மரக்கொல்லனே. ஓரறிவுயிருள்ள மரத்தை வெட்டிக்கொல்வதால், அவன் கொல்லன் எனப்பட்டான்; அவன்தொழில் கொல் எனப்பட்டது. வன்பொருள் காணாது மென்பொருள் கண்டால் இதற்க்கு திருத்துவது /அலங்கரிப்பது என்று பொருள் காணலாம். இதனை உணர்ந்துதான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்னும் திரைப்படத்தில் "கொலை எப்படி மன்னா கலையாகும்?" என ஒரு நகைசுவை வசனமும் புகுத்தியிருப்பார்களோ என்னவோ . ஆனால் படத்தில் கூறப்படும் தருவாய் என்னவோ வேறு.
ஆங்கிலத்தில் இது திரிந்து Skill ஆனது.இது சமஸ்கிருதத்திலிருந்து கூட வந்திருக்க வாய்ப்புண்டு. எப்படி தமிழில் இருந்துதான் வந்தது என கூற இயலும்? என நினைக்கும் அறிவுஜீவிகள் சற்று பின்வரும் சிலப்பதிகார வரிகளை உற்று காண்க.
மரங்கொ றச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
யெத்திசைச் செலினு மத்திசைச் சோறே.
இதன் வேர்ச்சொல் தக்கணம் அல்லது தை(தையல் தொழில்/இணைப்பதை மற்றும் மரக்கன்றை குறிக்கும்) ஆக இருக்கக்கூடும் என அறியப்படுகிறது.
தக்கணம் என்பதற்கு வலப்பக்கம் என்றும் ஒரு பொருள் உண்டு, இது மேற்கத்திய மக்களிடம் Dexter (skilled)என திரிந்தது. வடக்கத்தியர்கள் வலது பக்கத்தை தாஹின்(दाईं) என அழைத்தனர்.
தக்க என்பதற்கு தகுந்த என்றும் ஒரு பொருள் உண்டு. மதிக்கத்தக்க நபர் என்று இன்றும் வழக்கில் உண்டு.
தக்கணம் என்றால் குறைந்த/தாழ்ந்த அல்லது சிறிய என்றும் பொருள். இன்று தமிழ் வழக்கில் இது இல்லை என்றாலும் தெலுங்கர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் பெருங்குன்றங்களை உடையதாக திகழ்ந்த குமரிக்கண்டம் பின்பு இயற்க்கை சீற்றங்களால் அழிந்தது. ஆதலால் வடக்கே இருக்கும் இமாலய மலைகள் ஓங்கி நிற்க தென்னகம் சரிந்து காணப்பட்டது. ஆதலால் வடக்கத்தியர்கள் தென்னகத்தை ஹிந்தியில் தக்ஷின்(दक्षिण)என அழைத்தார்கள்.
Deccan Plateau என்று நாம் ஆங்கிலத்தில் அழைக்கும் தக்கனநாட்டிற்கும் இவ்வாறே பெயர் சூட்டப்பட்டது.
இது போல் சமஸ்க்ருத இலக்கியம் ஏதேனும் இருந்தால் கூட அதன் தொன்மையை உற்று ஆய்தல் அவசியம்.
Functional:
இதன் பொருள் என்ன என்பது நான் விளக்கி கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இது எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதை இப்பொழுது காண்போம்.
மேற்கத்திய மொழி ஆய்வாளர்களின் ஆய்வின்படி இது Functionem என்னும் இலத்தீன சொல்லிருந்து வந்ததாக கூறப்படுகிறது.. இதன் வேர் சொல் Funct ஆகும். இதன் எச்ச வினை Fungi ஆகும். இதற்க்கு மேல் ஆராய அவர்களுக்கு போதுமான மொழியறிவும் ஆர்வமும் இல்லாததுதான் காரணம்.
Functionem என்பது பூஞ்சணம் என்னும் இலங்கை வழக்கிலிருக்கும் தமிழ் சொல்தான்.
Fungi என்பது பூஞ்சை என்னும் தமிழ் சொல்தான்.
பகரம் ஃபகரமாக திரிந்தது. மேலும் விவரங்களுக்கு தெய்வமும் தேய்த்தீயும் என்ற பதிவை காண்க.
எழுதும் பொழுது ஃபூஞ்சை(Fungi) என எழுதி ஃபங்கை என்று வாசித்து உச்சரிப்பையே மாற்றினர் மேற்கத்தியர்கள். ஆனால் கொண்டையை மறைக்க மறந்தனர்.
பூஞ்சையானது பல சூழல்களில் வாழ்வதோடு அல்லாது அதன் திறனையும் செயல்பாட்டையும் அருகே இருந்து காணமுடிந்ததால் என்னவோ பின்னர் செயல்பாட்டிற்கு பொதுப்பெயராகவே மாற்றினர்.
Functional /Technical , இதற்கு வித்திட்டவர்கள் தமிழர்கள் தான். பல்லாயிரம் ஆண்டிற்கு முன்பே மூத்த செயற்பாட்டு அறிஞர்களும்(Senior-most functional specialists) தொழிற்நுட்ப அறிஞர்களுமாக(Senior Most Technical Specialists) விளங்கினர் .

Saturday, 5 November 2016
செவ்வாயும் Tuesdayum
திங்கட்கிழமையை அடுத்து வரும் நாளானது செவ்வாய். உலகத்தில் பெரும்பாலான மொழிகளில் இதனை மார்ஸ்(Mars), ட்யூஸ்(Tuesday) மற்றும் அங்காரகன் என்ற சொல்லிலிருந்தோ அல்லது அதனை சார்ந்த சொல்லால் அழைப்பர்.
போர் கடவுள் என நம்பும் மேற்கத்தியம் (Western references to God Of Wars):
நாம் அன்றாடம் பிரயோகிக்கும் ஆங்கில வார்த்தையான Tuesday வை எடுத்துக்கொள்வோம்.
இதற்க்கு பல மூலங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தாலும் இதன் உறைவிடம் லத்தீன மொழியாக இருக்க கூடும் dies Martis என பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் திண்ணமாக நம்புகிறார்கள்.
இந்த டேய்ஸ்(Days) எங்கிருந்து வந்தது? தினம்/தேய் தீ என்கிற தமிழ் சொல்லிலிருந்து மறுவியதுதான். மேலும் விளங்க தெய்வமும் Deityum என்கிற தொகுப்பை பார்க்கவும்.
இவ்வாறே மார்ஸும்(Mars) மவ்வ்ர்ட்(போர் கடவுள்) என்னும் லத்தின சொல்லிலிருந்து வந்தது என்று சொற்பிறப்பியல் வல்லுனர்களின் நம்பிக்கை.
தமிழில் போர் கடவுளை செய்யோன் /சேயோன் என்று அழைப்பதுண்டு. இது அல்லாது செந்நிறமுடையோன், அருகன், முருகன், கார்த்திகேயன் என அழைப்பர். சரி இதற்கும் லத்தின மொழியான மாவொர்டுக்கும்(Mavort) என்ன உறவு என்று கேட்கிறீர்களா?
தமிழ் போர் கடவுளுக்கு மற்றோரு எளிய பெயர் உண்டு. அதுவே மாவீரன். இது பின்பு மாவோர்ட் என்று திரிந்தது.
அரேபிய மொழியில் Al-thalatha (மூன்றாவது நாள்) என அழைப்பர்.
நெருப்பை குறிக்கும் வார்த்தைகள்(References to Firy/Fury planet)
தமிழ் மற்றும் குடநாட்டவரின் தமிழ் அல்லாது இந்தியாவின் மற்ற மொழிகளில் சமஸ்க்ரிதத்தில் இருந்து வந்த மங்கள் என்ற சொல்லை சார்ந்தே இருக்கும். இது பற்றி இணையத்தில் கிடைத்த தகவலை அப்படியே இங்கு வழிமொழிகிறேன்.
தமிழர் பண்டிகைகளின் போதும் திருமண நிகழ்வுகளின் போதும் மண் கலயத்தை வைத்து வழிபடுவது சிந்து சமவெளி காலம் தொட்டு இன்றும் தொடரும் மரபு, எனவே தான் நல்ல நிகழ்வுகளின் போது மண் கலம் பெருகட்டும் என்று வாழ்த்துவது மரபு, அதுவே பின்பு மண் + கலம் மங்கலம் , பின்பு மங்களம் என்று ஆனதென கூறுகிறார்
அங்காரம் என்றால் நெருப்பு, கரி என்று பொருள். அங்காரகன் அங்காரத்தை அகத்தில் வைத்திருப்பவன் என்று பொருள். இதன் மூல சொல் கரி, காரம் ஆகும். சமஸ்க்ருத பண்டிதர்களிடம் இந்த சொல்லை பிரித்து விளக்கம் கூற இயலுமா என்ற கேள்வி எழுகிறது.
நெருப்பை குறிக்கும் எழுத்தணி :
உதாரணத்துக்கு கொரியன் மொழியை எடுத்துக்கொள்வோம். திங்கட்கிழமையை Hwa-Yo-il என அழைப்பர். ஒன்றும் புலன் படவில்லையே என்கிறீர்களா?
Hwa 火 என்றால் கொரியா மொழியில் பொறி என்று அர்த்தம். இது ஆங்கிலத்துக்கு Fire என்று திரிந்தது. சீன மொழியிலிருந்து மருவி வந்ததாக ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. இந்த எழுத்தினை உற்று நோக்கினால் அது விறகுகள் எறிவது போல் தெரியும்.
எல் என்பது சூரியனையும்(எல்லோன்) நாளையும் குறிக்கும் தூய தமிழ் சொல்தான். கொரிய மொழியில் எல் என்பது சூரியனையும் நாளையும் குறிக்கும்.
சரி அப்படியென்றால் யோ என்ற சொல்லுக்கு என்ன விளக்கம்?. தமிழில் எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
புளி காய்க்கும் மரத்தை புளியமரம் என்றும் அதிலிருந்து வரும் பழத்தை புளியம்பழம் என்றும் அழைக்கிறோம், அல்லவா? இதில் யம் அல்லது அம் என்று இடையில் வருவது சாரியை. தமிழில் இவ்வாறு சொல்லிற்கு ஏற்ற படி இதை பயன்படுத்துவது உண்டு.
இதே போல் தான் யோ வும், கொரிய மொழியில் சாரியையாக பயன்படுத்தப்படுகிறது.
பொறி நாள் என்பதே Hwa-Yo-il.
உலகத்தின் முதல் விஞ்ஞானிகள் தமிழர்கள் :
சரி இப்பொழுது தமிழுக்கு வருவோம்.
செவ்வாய் என்பதற்கு சிவப்பாய் இருக்கும் கோள் என்பது பொருள். செவ்விதழ், செங்கல் என சிகப்பு தன்மை உடையவற்றை அவ்வாறு அழைத்தல் இயல்பு. பின்வரும் அறிக்கையை நாசா வெளியிட்டு இருக்கிறது.
Photos from spacecraft show that Mars has a rusty red color. The hue comes from the fact that the surface is *actually* rusty, as in, it's rich in iron oxide
எந்த வித தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாமலேயே எளிய மனிதனுக்கு விளங்கும் படி செவ்வாய் என்று தமிழர்கள் பகுத்து ஆராய்ந்து அழைத்தனர்.
தமிழ் என்னும் திரை கடலில் திரவியம் தேடி மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்
அன்புடன்
அன்புக்குமரன் எத்தியரசன்

Saturday, 22 October 2016
திங்களும் Mondayum
See you next week, see you on Monday. என்று நாம் அதிகம் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்
அது என்ன Monday? எழுதும் பொழுது மொண்டே என்று எழுதி மண்டே என ஆங்கிலத்தில் உச்சரிக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு என்று யோசித்ததுண்டா?
தமிழில் நிலவை குறிக்க பல சொற்கள் உண்டு. உதாரணத்திற்கு மதி, சந்திரன், நிலவு, திங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

உலகில் உள்ள மொழிகளை ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலும் திங்கள் கிழமையை / மதிநாளை நிலவின் நாளாக அல்லது நிலவின் பண்பினை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கும். மனிச்சுருக்கமாக சொன்னால் மூன் அல்லது லூனார் என்ற சொல்லை சார்ந்து வரும். தமிழ் அல்லாது கிழக்கு ஆசிய பகுதிகளில் நிலவின் பண்பினை சார்ந்த பெயர்களை காண முடியும். தமிழர்களை போலவே தங்களது பண்பாட்டின் மீதும் மொழி மீதும் மிக முக்கியமாக பகுத்தறிவின் மீதும் பற்று இருப்பதனால்தான் என்னவோ.
ஒப்பியல் ஆய்வு:
சரி மூன்(Moon) எப்படி வந்தது. மூன்றாம் பிறை(Crescent) எனப்படும் தமிழ் சொல்லிலிருந்து திரிந்து சென்றிருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்களின் திண்ணமான கருத்து..
அப்படியென்றால் லூனார்(Lunar)? இது லக்னோஸ் என்னும் கிரேக்க சொல்லிலிருந்து தெரிந்ததே என்று சொற்பிறப்பியல் ஆய்வின் ஊகம். மேற்கத்தியவர்களில் சிலர் இந்த பெயர் சந்திரனை ஆளும் தெய்வத்தின் பெயராகவும் பார்க்கிறார்கள்..
சரி இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம்? ஆம் இலக்கினம் என்னும் தமிழ் சொல்லிலிருந்து தெரிந்ததே லக்னோஸ். ஹிந்திக்கு இது சென்றபோது லக்ன என்று திரிந்தது. இலக்கினம் என்பது இராசியின் உதயமாயிற்றே(Sun Sign) ! அப்படியிருக்க இராசி(Moon sign) என்ற சொல்லிலிருந்து அல்லவா மற்ற மொழிகளுக்கு சென்றிருக்க வேண்டும்? என எனக்குள்ளும் இந்த கேள்வி எழுந்தது. சற்று ஆராய்ந்த பின் புலன் பட்டது.
சந்திர லக்கினம் ( சாதகத்தின் முதல் வீடாக அறியப்படும் ) நினைவகம் , மன செயல்பாட்டை மற்றும் பெண்ணின் வளம் முதலியவற்றை தீர்மானிக்க உதவுகின்றன என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. பகுத்து அறிந்த பின் வந்ததே இந்த நம்பிக்கை
இந்த நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று இன்றய நவ நாகரீக போலி மேற்கதித்ய மக்கள் தங்களை 21ஆம் நூற்றாண்டு மனிதர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் மக்கள்தான் சிலர் செய்யும் சித்த சுவாதீன செயல்களை கண்டு lunatic/lunacy என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர், இந்த lunatic எப்படி வந்தது? சந்திரனின் நிலையை பொறுத்து மனிதர்களின் மன நிலை மாறும் என்பதனால் தான் நிலவின் பெயரான lunar என்ற வார்த்தையில் இருந்து lunacy மற்றும் lunatic என்று அழைக்க தொடங்கினர்.
மார்கழி மாதத்தை மார்கழி திங்கள் என்றும் நிலாவை மதி என்றும் குறிக்கும் வைரமுத்துவின் அழகான இந்த பாடலை உற்று கவனித்தால் நிலவினை இரு பொருளோடு புகுத்தியது புலன் படும்.
இளையராஜா ஒரு படிக்கு மேல் சென்று நிலவின் பல பரிமாணங்களை ஒரு பாட்டில் அடைத்திருப்பார்.
இசையில் தொடங்குதம்மா என்ற அந்த ஹே ராம் என்னும் திரைப்படத்தில் வரும்.
Month என்னும் ஆங்கில சொல்லும் moon இலிருந்து வந்ததே.
தமிழிலும் அப்படித்தான். ஒரு திங்கள் 27 நாட்களை குறிக்கும். இன்று நமது தினசரி வழக்கில் திங்கள் மறைந்து மாதம் என்று (மதியில் இருந்து திரிந்து சென்றது ) கூறுகின்றோம். நாம் மறந்தாலும் நமது அருமை கன்னடர்கள் இன்றும் பேச்சு வழக்கில் திங்களு என்ற தமிழ் சொல்லால் தான் மாதத்தினை அழைக்கின்றனர்.
இதனை மேலும் விளக்கும் வகையில் கீழ்கண்ட காணொளியை 6:11 தொடங்கி 6:55 வரை கண்டால் நான் சொல்வது விளங்கும்.
அரேபிய நாடுகளில் மிக வசதியாக திங்கள் கிழமையை al-ithnayn (இரண்டாவது நாள்) என்று அழைப்பர்.
கொரியனில் இருக்கும் தமிழ் (The Korean connection):
சரி கிழக்கு ஆசியாவில் நமக்கு புரியாதவாறு ஏதோ இருக்குமே அதுவும் தமிழிலிருந்து சென்றதா? ஆம் என்பதே எனது திண்ணமான பதில்.
உதாரணத்துக்கு கொரியன் மொழியை எடுத்துக்கொள்வோம். திங்கட்கிழமையை Wol-Yo-il என அழைப்பர். ஒன்றும் புலன் படவில்லையே என்கிறீர்களா?
ஒள் என்பது ஒளியை குறிக்கும் தூய தமிழ் சொல்தான். கொரிய மொழியில் ஒள் என்பது நிலவையும் நிலவொளியையும் குறிக்கும்.
எல் என்பது சூரியனையும்(எல்லோன்) நாளையும் குறிக்கும் தூய தமிழ் சொல்தான். கொரிய மொழியில் எல் என்பது சூரியனையும் நாளையும் குறிக்கும்.
சரி அப்படியென்றால் யோ என்ற சொல்லுக்கு என்ன விளக்கம்?. தமிழில் எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
புளி காய்க்கும் மரத்தை புளியமரம் என்றும் அதிலிருந்து வரும் பழத்தை புளியம்பழம் என்றும் அழைக்கிறோம், அல்லவா? இதில் யம் அல்லது அம் என்று இடையில் வருவது சாரியை. தமிழில் இவ்வாறு சொல்லிற்கு ஏற்ற படி இதை பயன்படுத்துவது உண்டு.
இதே போல் தான் யோ வும், கொரிய மொழியில் சாரியையாக பயன்படுத்தப்படுகிறது.
ஒளியை(நிலவொளி) தரும் நிலவு நாள் என்பதே Wol-Yo-il.
தமிழ் முதற்றாய மொழிதான் என்பதை விளக்க கொரியா வரை சென்ற நமக்கு சமஸ்க்ருத மோகத்தால் சோம வாரம் என்று அழைக்கும் கூட்டத்திற்கு என்ன பதில் ?
இணையத்தில் கிட்டியதை அப்படியே இங்கு இடுகின்றேன்,
இந்து தொன்மவியலின் அடிப்படையில் சோம பானம் (சமஸ்கிருதம்: सोम, சோமா) என்பது ஆரியர்கள் அருந்தும் பானமாகும். மயக்கம் தரும் பானங்களில் வேதகால மக்களிடையே மிக விரிவாக பரவி இருந்தது.
சந்திரக்கடவுளாகிய சோமன் வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் சோம தாவரம் என்றுள்ளதாலும் இந்த பானம் சோம பானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும், மயக்கம் தர வல்லதாகவும் சித்தரிக்கப்படுகிறது
ஆக ஒரு கடவுளின் பெயராலும் மயக்கம் தரும் தாவரத்தின் பெயராலும் திங்கட்கிழமையை அழைக்கின்றனர். இது தமிழில் இருந்து சென்றதா என்பதிற்கு என்னிடம் பதில் இல்லை, எனினும் இதில் பகுத்தறிவுத்தன்மை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது ?.
உலகத்தின் முதல் விஞ்ஞானிகள் தமிழர்கள் :
இப்பொழுது தமிழுக்கு வருவோம். ஏன் நாம் திங்கள் என்று அழைக்கிறோம். திம் + கள். திம்மை கல்(Ball of Rocks) என்பதன் சுருக்கம் தான் திங்கள்.
மிகுந்த தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பிறகு ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின் வெளிப்பாடாக கீழே உள்ள செயதியை வெளியிட்டு இருக்கிறார்கள் மேற்கத்தியர்கள்.
The lunar highlands are mostly made of anorthosite. Breccias are igneous rocks composed of pieces of older rocks. As meteoroids crash onto the Moon surface, rocks are broken into many pieces.
எந்த தொழில் நுட்ப வளர்ச்சியின் துணை இல்லாமலேயே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு இது புலன் பட்டு எளிய மனிதனுக்கு விளங்கும் வகையில் திங்கள் என்று அழைத்திருக்கிறான்.
சரி ஏதோ ஒரு கிழமைக்கு இது தற்செயலாக அமைந்துவிட்டது என்று வந்தேறிகளின் மூளை சலவைக்கு உள்ளாகிய மனதில் ஐயம் இருப்பின் எனது அடுத்த பதிப்புகளில் மற்ற கிழமையின் விளக்கத்தோடு சாட்டை அடியாக வரும்..

Subscribe to:
Comments (Atom)