Tuesday, 7 March 2017

ஓசையற்ற ரகரம் (The Silent 'R' in Girl)


ஆங்கிலத்தில் அநேகமான சொற்களில் R என்னும் எழுத்து silent என்ற பெயரில் ஓசையற்று உச்சரிக்கப்படுவதில்லை.
ஒரு உதாரணத்திற்கு Girl ஐ எடுத்துக்கொள்வோம்.
நம்மில் முதன் முதலில் ஆங்கிலம் படிப்பவர்கள் கேர்ள் என்று உச்சரிப்பர், அப்படி உச்சரிக்கும் போது  அது கேர்ள் இல்லை, கேள் என்று சரி செய்வது உண்டு. இதன் பின்னணி தான் என்ன? வினவினால் அதெல்லாம் அப்படிதான் என்று அறியாமையால் நம் வாயை அடைத்துவிடுவார்கள்.





Girl என்பது gurwilon என்ற மூல ஜெர்மானிய சொல்லிலிருந்து வந்தது என்று மொழி ஆய்வாளர்களின் கருத்து. இது குருளை என்னும் தமிழ் சொல்லிலிருந்து திரிந்து சென்றதே.
தமிழில் ஒருசார் விலங்கினகுட்டிகளையும் இருப்பால் இளம் குழந்தைகளையும் குருளை என்று அழைப்பது வழக்கம். இதன் மூலச்சொல் குறு/உரு ஆகும். வேர் சொல் உல் ஆகும். பின்பு என்று திரிந்து ஆங்கிலத்தில் சென்று இன்று சிறுமிகளை அழைப்பதற்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்.

பின்வரும் குறுந்தொகை பாடல்  இதன் பயன்பாட்டை எடுத்துரைக்கும் ஒரு சான்று.

குறுந்தொகை பாடல்: 47 (கருங்கால்)

தோழி கூற்று

    கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
    இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
    எல்லி வருநர் களவிற்கு
    நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.

ஆக நம் மொழியிலிருந்து திரிந்து இன்று அறையும் குறையுமாக  அண்மையில் முளைத்த மொழிக்கு இதுதான் உச்சரிப்பு என்று நமக்கே பாடம் கற்ப்பிக்கின்றனர். தோற்ற வடிவத்தை மாற்றினாலும் கொண்டையை மறைக்க மறந்து விட்டனர். அதனால் தான் இன்று கேள் என்று உச்சரித்தாலும் கேர்ள் என்றே எழுதுகின்றனர்.

இனி யாரவது கேர்ள் என்று உச்சரித்தால் எல்லி நகையாடாமல் பணிவாகவே திருத்தலாமே.

தமிழ் என்னும் திரைக்கடலில் திரவியம் தேடி மீண்டும் ஒரு பதிவில் சந்திப்ப்போம்.
- அன்புக்குமரன் எத்தியரசன்

1 comment:

  1. எஸ்.வி.சேகர் ஒரு நாடகத்தில் சொல்வார்: Bachelor என்ற வார்த்தை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்றது. பேச்சிலர் = பேச்சு + இலர். பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாதவர்.

    - ஞானசேகர்

    ReplyDelete