Monday, 27 March 2017

வியாழனும் Thursdayum

தமிழர்கள் நாகரீகத்தில் மட்டும் அல்ல, பகுத்தறிதலிலும் முன்னோடிகளே.

வியாழக்கிழமையை உலகத்தில் அநேக மொழிகளில் குரு, ஜுவே மற்றும் ப்ரஹஸ்பதி என்ற சொற்களை சார்ந்து பெயரிடப்பட்டிருக்கும்.
கிழக்கு ஆசிய பகுதிகளில் மற்றும் மத்திய கிழக்கு பகுத்தலில் சற்று வேறுபட்டு இருக்கும்.

தொர்ஸ், குரு, ஜூவி மற்றும் ப்ரஹஸ்பதி இவை இணைத்தும் கடவுளை சார்ந்த பெயர்களே. பிரம்மன், சரஸ்வதி, கடவுளின் அரசர், ஆகாயத்தின் கடவுள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மனித ஆற்றலை வெளி கொண்டு வந்து இன்று பல தொழில்நுட்ப வளர்ச்சிகளை பெற்றிருந்தும் இதன் பெயர்களின் பின்னணியை ஆராயாமல் இந்த பெயர்களை ஏற்று பயன் படுத்தி கொண்டிருக்கிறோம்.

The Korean/Chineese Connection
 
வியாழ கிழமையை  கொரிய மொழியில் மோக்-யோ-இல்(목요일) என்று அழைப்பர்.

இல் என்பது கதிரவனையும் தினத்தையும்  குறிக்கும். தமிழிலும் எல்(எல்லோன் ) என்றால் கதிரவனையும் நாளையும்  குறிக்கும்.
மோக் என்றால் கொரியா மொழியில் மரம் மற்றும் மரக்கட்டையை குறிக்கும். இதை மொக்கை/மொக்கு என்ற தமிழ் சொல்லிலிருந்து தெரிந்ததே. மரமானது ஆகாசத்திற்கு அப்பால் படர்ந்து இருக்கும் எளிதில் பற்றிக்கொள்ள கூடிய ஒரு வித காற்றிற்கும் மூல காரணம் என்று பண்டைய சீனர்கள் நம்பினர்.
பகுத்தறிவு இருப்பது போல் தெரிந்தால் சீன நாட்டின் முன்னோடிகளை பாராட்டத்தான் வேண்டும்.

இப்பொழுது தமிழுக்கு வருவோம்

வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு வேறுபாட்டுடன் வியாழன் என்று அழைக்கிறோம்.
வியல் + ஆழம். வியல் என்பது அகலம் மற்றும் விரிவை குறிக்கும். ஆழம் என்பது விட்டத்தை குறிக்கும்.  இதனை நிரூபணம் செய்யும் வகையில் செயற்கை கோள்களை அனுப்பி பல் வேறு தொழில்நுட்பங்களின் உதவியோடு பின் வரும் தகவலை சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டு உள்ளது.


Jupiter is the largest planet in the solar system. It is approximately 143,000 kilometers (about 89,000 miles) wide at its equator. Jupiter is so large that all of the other planets in the solar system could fit inside it. More than 1,300 Earths would fit inside Jupiter.



அகண்டு விரிந்து மிகுந்த ஆழத்துடன் காணப்படுவதால் பகுத்து அறிந்து மொழிகூற்றுகளை வழங்கி சித்தர்களாய் பகுத்தறிவாளர்களாய் விளங்கிய தமிழர்கள் வியாழன் என்று அழைத்தனர் .

இடம் பொருள் ஏவல் கருதி இன்று அதிகம் பயன்படுத்தாமல் போயினும் வியாழன் என்று எவரேனும் அழைத்தால் மதித்து ஏற்று கொள்வோமே!! மனிதநேயத்துக்கே முன்னோடிகளாவர் நம் தமிழர்கள்.

2 comments:

  1. அது சரி.

    ஞாயிறு - Sun
    திங்கள் - Moon
    செவ்வாய் - Mars
    புதன் - Mercury
    வியாழன் - Jupiter
    வெள்ளி - Venus
    சனி - Saturn

    என்ன வரிசை இது? எந்த ஒழுங்கும் இல்லாமல் கிழமைகள் ஏன் இந்த வரிசைப்படி அமைக்கப்பட்டு இருக்கின்றன தெரியுமா?

    - ஞானசேகர்

    ReplyDelete
  2. இந்த விழியத்தை காண்க! https://www.youtube.com/watch?v=EmsjyLsllTY

    ReplyDelete