Sunday, 4 June 2017

அரியும் சிவனும் ஒன்னு ;அறியாதவன் வாயில மண்ணு !

அரசு, அரசன் என்று ஒரு காலத்தில் நம் ஆண் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதுண்டு. இன்று இது சற்று குறைந்து விட்டது. ஒரு வேலை அரசியலில் உள்ள வெறுப்பின் காரணத்தாலோ என்னவோ.


விக்கிபீடியா தளத்திலிருந்து  சில துளி :

தமிழில் ஆண் சிங்கத்தை குற்றாலக் குறவஞ்சியில் அரிமா அல்லது ஏறு என்றும், பெண் சிங்கத்தை சிம்மம் என்றும் கூறுவது வழக்கம். ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்

மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றி
முந்நீர்க் கடனஞ்சை யுண்டார்க் கிடம்போலு முனைசேர்சீயம்
அன்னீர் மைகுன்றி யழலால் விழிகுறைய வழியுமுன்றிற்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே.

சீயம் என்றால் சிங்கம் பொருள். சிவப்பு நிறம் கொண்டதாக இருப்பதால் அதற்க்கு அப்படி பெயர் வந்திருக்க கூடும்.  பின்பு திரிந்து சிம்மம் ஆனது .செகு (அழித்தல்) என்ற சொல்லிலிருந்து வந்திருக்கக்கூடும் என்பது மொழியாராய்ச்சியாளர்களின் கூற்று.

 இவை ஒரு புறமிக்க இந்த பொருள் கொண்ட தமிழ் அல்லாது மற்ற பெயர்களை சூட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் அதற்க்கு எல்லாம் வித்திட்டது தமிழே.
சிங்கம் கர்ஜிக்கும் போது அர் அர் அல்லது உர் உர் என்று ஒலி எழுப்புவது உண்டு. காட்டுக்குள் மிகுந்த ஆளுமை உள்ளதால் 5 அறிவு படைத்த மிருகத்தை இன்று மனிதனை புகழ்வதற்கு உபயோகிக்கிறோம். அவ்வாறு தான் அரி, அரவு, அரசு, அரையன், அரைசன். அரசன் மற்றும் அரசு என்ற சொற்கள் முளைத்திருக்கக்கூடும்.
பின்பு காலப்போக்கில் இது ராசன், ராசா, ராஜா , ராஜு, ராஜ், ராயுடு, ராயலா ,  ராய், ராயல், ஏரியல்(Hebrew), என்று பல சொற்களாய்  திரிந்தது.



தமிழ் முதன்மையானது என்றால் ஆங்கிலத்தில் சம்மந்தமே இல்லாமல் லயன் என்கிறார்களே, அது எங்கிருந்து வந்தது என்று நீங்கள் கேட்பது புரிகிறது,இது லியோ என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்தது என மொழியாராய்ச்சியாளர்களின் கருத்து. இதுவும் தமிழ் சொல்லே.யாளி என்பது தென்னிந்திய கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம். இது இரண்டு எழுத்து சொல் என்பதால் எவரேனும் யாளியாளியாளி என்று கூவினால் லியோ எம்பதுபோல் இருக்கும். இந்த லியோ தான் ஆங்கிலத்தில் லயன் என்று திரிந்தது.

கோள் இபம் கயம் மூழ்க. குளிர் கயக்
கோளி. பங்கயம். ஊழ்கக் குலைந்தவால்;
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி. ஏய்.
ஆளி பொங்கும். அரம்பையர் ஓதியே



Leo(Latin)
Leonardo
Lion(Eng/French)
Asad(Arabic)
Sinha(Bengali/Gujarati/Kannada/Marathi/Nepali)
leeuw(Dutch)
leijona(Finnish)
liontári(Greek)
Archon(Greek)
Sher
oroszlán(Hungarian)
Ljón(Icelandic)
Indonesian(Singa)
leon(Spanish/Irish)
Leone(Italian)
Saja(Korean)
Simham(Malayalam)
Lew(Polish)
Leao(Potuguese)
Leu(Romanian)
Lev(Russian)
Lejon(Swedish)
Singto(Thai)
Aslan(Turkish)
Llew(Welsh)

2 comments:

  1. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே உச்சரிப்பும், ஒரே பொருளும் கொண்ட ஒரு வார்த்தை இருக்கிறது.

    Editorial = ஏடிட்டோரியல் = ஏடு + இட்டோர் + இயல்

    இது எப்புடி இருக்கு?

    - ஞானசேகர்

    ReplyDelete