Saturday, 22 October 2016

திங்களும் Mondayum

See you next week, see you on Monday. என்று நாம் அதிகம் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்

அது என்ன Monday? எழுதும் பொழுது மொண்டே என்று எழுதி மண்டே என ஆங்கிலத்தில் உச்சரிக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு  என்று யோசித்ததுண்டா?

தமிழில் நிலவை குறிக்க பல சொற்கள் உண்டு. உதாரணத்திற்கு மதி, சந்திரன்,  நிலவு, திங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

Image result

உலகில் உள்ள மொழிகளை ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலும் திங்கள் கிழமையை / மதிநாளை நிலவின் நாளாக அல்லது நிலவின் பண்பினை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கும். மனிச்சுருக்கமாக சொன்னால்  மூன் அல்லது லூனார் என்ற சொல்லை சார்ந்து வரும். தமிழ் அல்லாது கிழக்கு ஆசிய பகுதிகளில் நிலவின் பண்பினை சார்ந்த பெயர்களை காண முடியும். தமிழர்களை போலவே தங்களது பண்பாட்டின் மீதும் மொழி  மீதும் மிக முக்கியமாக பகுத்தறிவின் மீதும் பற்று இருப்பதனால்தான் என்னவோ.

ஒப்பியல் ஆய்வு:

சரி மூன்(Moon) எப்படி வந்தது. மூன்றாம் பிறை(Crescent) எனப்படும் தமிழ் சொல்லிலிருந்து திரிந்து சென்றிருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்களின் திண்ணமான கருத்து..
அப்படியென்றால் லூனார்(Lunar)? இது லக்னோஸ் என்னும் கிரேக்க சொல்லிலிருந்து தெரிந்ததே  என்று சொற்பிறப்பியல் ஆய்வின் ஊகம். மேற்கத்தியவர்களில் சிலர் இந்த பெயர் சந்திரனை ஆளும் தெய்வத்தின் பெயராகவும் பார்க்கிறார்கள்..
சரி இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம்? ஆம் இலக்கினம் என்னும் தமிழ் சொல்லிலிருந்து தெரிந்ததே லக்னோஸ். ஹிந்திக்கு இது சென்றபோது லக்ன  என்று திரிந்தது. இலக்கினம் என்பது இராசியின் உதயமாயிற்றே(Sun Sign) ! அப்படியிருக்க இராசி(Moon sign) என்ற சொல்லிலிருந்து அல்லவா மற்ற மொழிகளுக்கு சென்றிருக்க வேண்டும்? என எனக்குள்ளும் இந்த கேள்வி எழுந்தது. சற்று ஆராய்ந்த பின் புலன் பட்டது.

சந்திர லக்கினம் ( சாதகத்தின் முதல் வீடாக அறியப்படும் )  நினைவகம் , மன செயல்பாட்டை மற்றும் பெண்ணின் வளம் முதலியவற்றை தீர்மானிக்க உதவுகின்றன என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. பகுத்து அறிந்த பின் வந்ததே இந்த நம்பிக்கை

இந்த நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று இன்றய நவ நாகரீக போலி மேற்கதித்ய  மக்கள்  தங்களை 21ஆம் நூற்றாண்டு மனிதர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் மக்கள்தான் சிலர் செய்யும் சித்த சுவாதீன  செயல்களை கண்டு  lunatic/lunacy என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர், இந்த lunatic எப்படி வந்தது? சந்திரனின் நிலையை பொறுத்து மனிதர்களின் மன நிலை மாறும் என்பதனால் தான் நிலவின் பெயரான  lunar என்ற வார்த்தையில் இருந்து lunacy மற்றும் lunatic என்று அழைக்க தொடங்கினர்.

 மார்கழி மாதத்தை மார்கழி திங்கள் என்றும் நிலாவை மதி என்றும் குறிக்கும் வைரமுத்துவின் அழகான இந்த பாடலை உற்று கவனித்தால் நிலவினை இரு பொருளோடு புகுத்தியது புலன் படும்.


இளையராஜா ஒரு படிக்கு மேல் சென்று நிலவின் பல பரிமாணங்களை ஒரு பாட்டில் அடைத்திருப்பார்.
இசையில் தொடங்குதம்மா என்ற அந்த ஹே ராம் என்னும் திரைப்படத்தில் வரும்.

 Month என்னும் ஆங்கில சொல்லும் moon இலிருந்து வந்ததே.

தமிழிலும் அப்படித்தான். ஒரு திங்கள் 27 நாட்களை குறிக்கும். இன்று நமது தினசரி  வழக்கில் திங்கள் மறைந்து மாதம் என்று (மதியில் இருந்து திரிந்து சென்றது  ) கூறுகின்றோம். நாம் மறந்தாலும் நமது அருமை கன்னடர்கள் இன்றும் பேச்சு வழக்கில் திங்களு என்ற தமிழ் சொல்லால் தான் மாதத்தினை அழைக்கின்றனர்.
இதனை மேலும் விளக்கும் வகையில் கீழ்கண்ட காணொளியை 6:11 தொடங்கி 6:55 வரை கண்டால் நான் சொல்வது விளங்கும்.





அரேபிய நாடுகளில் மிக வசதியாக திங்கள் கிழமையை al-ithnayn (இரண்டாவது நாள்) என்று அழைப்பர். 

 கொரியனில் இருக்கும் தமிழ் (The Korean connection):


சரி கிழக்கு ஆசியாவில் நமக்கு புரியாதவாறு ஏதோ இருக்குமே அதுவும் தமிழிலிருந்து சென்றதா? ஆம் என்பதே எனது  திண்ணமான பதில்.

உதாரணத்துக்கு கொரியன் மொழியை எடுத்துக்கொள்வோம். திங்கட்கிழமையை Wol-Yo-il என அழைப்பர். ஒன்றும் புலன் படவில்லையே என்கிறீர்களா?
ஒள் என்பது ஒளியை குறிக்கும் தூய தமிழ் சொல்தான். கொரிய மொழியில் ஒள் என்பது நிலவையும் நிலவொளியையும்  குறிக்கும்.
எல் என்பது சூரியனையும்(எல்லோன்)  நாளையும் குறிக்கும் தூய தமிழ் சொல்தான். கொரிய மொழியில் எல் என்பது சூரியனையும் நாளையும் குறிக்கும்.

சரி அப்படியென்றால் யோ என்ற சொல்லுக்கு என்ன விளக்கம்?. தமிழில் எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

புளி காய்க்கும் மரத்தை புளியமரம் என்றும் அதிலிருந்து வரும் பழத்தை புளியம்பழம் என்றும்  அழைக்கிறோம்,  அல்லவா? இதில் யம் அல்லது அம் என்று இடையில் வருவது சாரியை. தமிழில் இவ்வாறு சொல்லிற்கு ஏற்ற படி இதை பயன்படுத்துவது உண்டு.

இதே போல் தான் யோ வும், கொரிய மொழியில் சாரியையாக பயன்படுத்தப்படுகிறது.
ஒளியை(நிலவொளி) தரும் நிலவு நாள் என்பதே Wol-Yo-il.

 தமிழ் முதற்றாய மொழிதான் என்பதை விளக்க கொரியா வரை சென்ற நமக்கு சமஸ்க்ருத மோகத்தால் சோம வாரம் என்று அழைக்கும் கூட்டத்திற்கு என்ன பதில் ?
இணையத்தில் கிட்டியதை அப்படியே இங்கு இடுகின்றேன்,
இந்து தொன்மவியலின் அடிப்படையில் சோம பானம் (சமஸ்கிருதம்: सोम, சோமா) என்பது ஆரியர்கள் அருந்தும் பானமாகும். மயக்கம் தரும் பானங்களில் வேதகால மக்களிடையே மிக விரிவாக பரவி இருந்தது.

சந்திரக்கடவுளாகிய சோமன் வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் சோம தாவரம் என்றுள்ளதாலும் இந்த பானம் சோம பானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும், மயக்கம் தர வல்லதாகவும் சித்தரிக்கப்படுகிறது

ஆக ஒரு கடவுளின் பெயராலும் மயக்கம் தரும் தாவரத்தின் பெயராலும் திங்கட்கிழமையை அழைக்கின்றனர். இது தமிழில் இருந்து சென்றதா என்பதிற்கு என்னிடம் பதில் இல்லை, எனினும் இதில் பகுத்தறிவுத்தன்மை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது ?.

உலகத்தின் முதல் விஞ்ஞானிகள் தமிழர்கள் :

இப்பொழுது தமிழுக்கு வருவோம். ஏன் நாம் திங்கள் என்று அழைக்கிறோம். திம் + கள்.  திம்மை கல்(Ball of Rocks) என்பதன் சுருக்கம் தான் திங்கள்.
மிகுந்த தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பிறகு ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின் வெளிப்பாடாக கீழே உள்ள செயதியை வெளியிட்டு இருக்கிறார்கள் மேற்கத்தியர்கள்.

 The lunar highlands are mostly made of anorthosite. Breccias are igneous rocks composed of pieces of older rocks. As meteoroids crash onto the Moon surface, rocks are broken into many pieces.

எந்த தொழில் நுட்ப வளர்ச்சியின் துணை இல்லாமலேயே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு  இது புலன் பட்டு எளிய மனிதனுக்கு விளங்கும் வகையில் திங்கள் என்று அழைத்திருக்கிறான்.

சரி ஏதோ ஒரு கிழமைக்கு இது தற்செயலாக அமைந்துவிட்டது என்று வந்தேறிகளின் மூளை சலவைக்கு உள்ளாகிய மனதில் ஐயம் இருப்பின் எனது அடுத்த பதிப்புகளில் மற்ற கிழமையின் விளக்கத்தோடு   சாட்டை அடியாக வரும்..

தமிழ் என்னும் திரை கடலில் திரவியம் தேடி  மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்

அன்புடன்
அன்புக்குமரன் எத்தியரசன்

No comments:

Post a Comment