நாம் வேலை செய்ததற்கான ஊதியம் / சம்பளம் நமக்கு கிட்டும் தருணம் மகிழ்ச்சிதானே!
எனினும் நம்மில் பல பேர் salary என்று தான் சொல்கிறோம். சம்பளம் என்று சொல்ல வரவில்லை.. இதை உலகமயமாக்கல் என்று சொல்வதா? அல்லது மேற்கத்திய ஏகாதிபத்தியம் என்று சொல்வதா? என்பது தனி வாதம்.
சரி சம்பளம் என்றால் என்ன.
பாவாணர் உரையிலிருந்து அப்படியே மீண்டும் பதித்துள்ளேன் :
‘உப்புக்கு உழைத்தல்’, ‘உப்பைத் தின்னுதல்’ என்னும் வழக்குகளையும், “உப்பிட்டவரை உள்ளளவும் நினை’’ என்னும் பழமொழியையும் நோக்குக
உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். பேரளம், கோவளம் (கோ அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள் என்கிறார்.
பொருட்களை வைத்து பரிவர்த்தனை(commodity - commodity trading) செய்யும் காலத்தின் பொது இந்த சொல் வந்திருக்கக்கூடும்.
சரி Salary எப்படி வந்தது? Salt(saline) என்னும் சொல்லிலிருந்து வந்தது. Soldier's pay, which was given partly in salt, - wages".
Salt என்பது Sail என்னும் சொல்லிருந்து வந்திருக்கக்கூடும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இது சலதி(கடல்)/சலம் என்ற தமிழ் சொல்லின் திரிபே.
எவ்வளவு காசு கிடைத்தாலும் அந்த காகிதத்தை நாம் சாப்பிட முடையாது அல்லவா, நமது அன்றாட உணவில் அரிசி இல்லை என்றால் என்ன? அதற்க்கு பதில் பல மாற்று உணவு இருக்கிறதே என்ற எண்ணம் இருந்தால், அது வந்தேறிகள் செய்த மூளை சலவை தான்.
நல்ல சாப்பாடு உணவில் வேண்டும் என்றால், அரிசி வேண்டும். அரிசி உற்பத்தி வேண்டும் என்றால், சம்பா போன்ற நெல்லின் சாகுபடி ஆகுவது முக்கியம். அதற்க்கு நீர் வேண்டும். வளமான நிலமும் வேண்டும். நீரை இன்று காசு கொடுத்து வாங்குகொறோம், நெல் சாகுபடிக்கு நீர் தர மறுக்கிறது அண்டை மாநில அரசு. நிலமோ மீத்தேன் எடுப்பதற்கும், பன்னாட்டு நிறுவனத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் ஏலம் விடப்பட்டு இருக்கிறது.
நாம் இயற்க்கை எய்தும் போது நமக்கு பிறகு வரும் சந்ததியினருக்கு என்ன விட்டுவிட்டு செல்கிறோம் என்று நாம் சற்று எண்ணி பார்க்க வேண்டும். ஆடம்பரமும் வசதியும் எதை நோக்கி செல்கிறது என்பதை சற்று பின்னோக்கி பார்த்தல் அவசியம் .
அன்புடன்,
அன்புகுமாரன் எத்தியரசன்
No comments:
Post a Comment