தமிழில் தெய்வம், பகவன், இறைவன், தேவன், கடவுள், சுவாமி, சாமி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவற்றுள் தெய்வம் என்ற சொல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, கற்காலத்தில் உள்ள மனிதன் இருள் நீங்கி ஒளியை தரும் கதிரவனை/ சூரியனை தெய்வமாக வணங்கினான்,
அதனால் தான் ஞாயிறு(ஞானம் இருக்கும் கோள்) என்ற சொல்லும் வந்தது. இன்று நாம் ஆங்கிலத்தில் Please enlighten me, Could you please throw some light on this? என்று சொல்வது இதனால் தான்.
சிட்டிசன் என்னும் திரைப்படத்தில் சிக்கி முக்கி கல்லு மோதுதே என்று ஒரு பாடல் உண்டு,
இதே போன்று தாமரையின் அழகான வரியில் நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே என்று பாடல்வேட்டையாடு விளையாடு என்னும் திரைப்படத்தில் வரும்.
சிக்கி முக்கி என்பது வெறும் சந்ததத்துக்காக நிரப்பப்பட்டது அல்ல. சிக்கி முக்கி கல் என்றால் என்ன? நெருப்பை உண்டாக்கக் கூடிய கல் வகைக்கு இவ்வாறு பெயர் வைத்தார்கள், இந்த கற்களை தேய்ப்பதனால் தீ பொறி உண்டாகும். இவ்வாறு தேய்த்தீ என்று திரிந்து ஆங்கிலத்துக்கு சென்றது. சரி அப்படியென்றால் ஆங்கிலத்தில் எப்படி நெருப்புக்கு Fire என்று பெயர் வந்தது. அதற்க்கு ஆய்வாளர்கள் கூறும் காரணம் fuery என்ற ஜெர்மனிய சொல்லிருந்து வந்திருக்கக்கூடும் என்று. அது பொறி என்ற தமிழ் சொல்லிருந்து திரிந்து சென்றதே,
பொறி எப்படி fuery ஆனது என்பதை உணர்த்த ஓர் எடுத்துக்காட்டுக்கு சற்று மலையாள கரையில் செல்வோமேயானால் அங்கே மனைவிக்கு பாரியா என்ற சொல் உண்டு. ஆனால் கோட்டயம் பகுதியில் Faaria என்றும் அழைப்பர்.எனக்கு பிடித்த ஒரு மலையாள படத்தில் வரும் இந்த காட்சியை கண்டால் நான் சொல்வது புலன் படும்.
பாவாணரின் கூற்று :
தேய் | + | உ | = | தேய்வு | - | தேவு | - | தே | - | தீ. |
தேய்வு | + | அம் | - | தேய்வம | - | தெய்வம் | ||
தேய்வம் | - | தேவம் | - | தேவன் |
தெய்வம் என்பது முதலாவது நெருப்பையும் பின்பு
சிவத்தையுங் குறிக்கும்.
(திருவாசக விரிவுரை காண்க.)
சிவ + ம் = சிவம் - சிவன் - சிவை.
சரி இப்படி இருக்க அண்மையில் தோன்றிய ஹிந்தியில் ஆக் என்கிறோமே. அது ஏன் ? அக்னி என்ற சொல்லிலிருந்து முளைத்ததுதான் ஆக் மற்றும் ignite என்ற ஆங்கில சொல்லும்.
அக்னி என்பது சமஸ்க்ரிதம் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்படி இருக்க, இந்த சொல்லுக்கு இங்கே என்ன வேலை? தமிழிலுள்ள அழனி என்ற சொல் தான் அக்னி என்று திரிந்து சமஸ்க்ரிதத்திற்கு சென்றது. இதற்க்கு காரணம் வேண்டுமா என்ன? தமிழர் மற்றும் குடநாட்டவர் அல்லாது வேறு யாராலும் 'ழ' கரத்தை எளிதில் உச்சரிக்க முடியாது.
Sanskrit - Agni
Hindi/Marathi - Aag
Bengali - Aguna
Punjaabi - Aga
Gujarati - Phāyara
Telugu - Nippu
Kannada - Benki
French - Feu
Greek - Fotia
Italian - Fuoco
Latin - Ignis
Russian - Ogon
Irish - Dóiteáin
Dutch - Brand
Poland - Pozar
தமிழ் என்னும் திரை கடலில் திரவியம் தேடி மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்
- அன்புக்குமரன் எத்தியரசன்
மிக அருமை...
ReplyDeleteஅருமை 👌
ReplyDelete