கட்டமைப்பு பொறியியலில் வரும் Column என்னும் சொல் தமிழிலிருந்து திரிந்து சென்றது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நிற்கும் போதும் நடக்கும் போதும் நமது கட்டமைப்பான உடலை தாங்கி கொண்டு செல்லும் கால்.
இதை மனதில் கொண்டு பின்பு தான் கட்டிய கட்டிடத்தை தாங்க கால் போன்ற தூணை அமைத்தான்.
இன்றும் பாண்டியநாட்டில் இருக்கும் ஒரு கோவிலை ஆயிரம் கால் மண்டபம் என்று தான் கூறுகின்றோம்.
நான்கு கால்களை தூணாக கொண்டிருக்கும் இருப்பினை நாற்காலி என்கின்றோம்.
மேலும் காலின் பல தன்மைகளை கொண்டு பல தமிழ் சொற்கள் உருவாகின என்று பாவாணர் உரையில் உள்ளது.அவை கீழ் காணலாம்.
அகாலம்.
அ + காலம்.
காலம்:
கால்+அம்=காலம். அம் சாரியை. கால் உடம்பின் காற்பாகமாகிய உறுப்பு.
கால் =
1.
leg
2. தூண்,
கால் போல்வது
3. canal
- கால்போல நீண்டோடுவது
4. வம்சம் -
கால்போலத் தொடர்வது
5. காற்று -
கால்போலச் சென்று வீசுவது
6.
time -
கால்போல நீண்டு செல்வது
- அன்புக்குமரன் எத்தியரசன்
No comments:
Post a Comment