Saturday, 5 November 2016

செவ்வாயும் Tuesdayum

திங்கட்கிழமையை அடுத்து வரும் நாளானது செவ்வாய். உலகத்தில் பெரும்பாலான மொழிகளில் இதனை மார்ஸ்(Mars), ட்யூஸ்(Tuesday) மற்றும் அங்காரகன் என்ற சொல்லிலிருந்தோ அல்லது அதனை சார்ந்த சொல்லால் அழைப்பர்.



போர் கடவுள் என நம்பும் மேற்கத்தியம் (Western references to God Of Wars):

நாம் அன்றாடம் பிரயோகிக்கும் ஆங்கில வார்த்தையான Tuesday வை எடுத்துக்கொள்வோம்.

இதற்க்கு பல மூலங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தாலும் இதன் உறைவிடம்  லத்தீன மொழியாக இருக்க கூடும் dies Martis என பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் திண்ணமாக நம்புகிறார்கள்.
இந்த டேய்ஸ்(Days) எங்கிருந்து வந்தது? தினம்/தேய் தீ என்கிற தமிழ் சொல்லிலிருந்து மறுவியதுதான். மேலும் விளங்க தெய்வமும் Deityum என்கிற தொகுப்பை பார்க்கவும்.

இவ்வாறே மார்ஸும்(Mars) மவ்வ்ர்ட்(போர் கடவுள்) என்னும் லத்தின சொல்லிலிருந்து வந்தது என்று சொற்பிறப்பியல் வல்லுனர்களின் நம்பிக்கை.

தமிழில் போர் கடவுளை செய்யோன் /சேயோன் என்று அழைப்பதுண்டு. இது அல்லாது செந்நிறமுடையோன், அருகன், முருகன், கார்த்திகேயன் என அழைப்பர். சரி இதற்கும் லத்தின மொழியான மாவொர்டுக்கும்(Mavort) என்ன உறவு என்று கேட்கிறீர்களா?

தமிழ் போர் கடவுளுக்கு மற்றோரு எளிய பெயர் உண்டு. அதுவே மாவீரன். இது பின்பு மாவோர்ட் என்று திரிந்தது.

அரேபிய மொழியில் Al-thalatha (மூன்றாவது நாள்) என அழைப்பர்.

நெருப்பை குறிக்கும் வார்த்தைகள்(References to Firy/Fury planet)

தமிழ் மற்றும் குடநாட்டவரின் தமிழ் அல்லாது இந்தியாவின் மற்ற மொழிகளில் சமஸ்க்ரிதத்தில் இருந்து வந்த மங்கள் என்ற சொல்லை சார்ந்தே இருக்கும். இது பற்றி இணையத்தில் கிடைத்த தகவலை அப்படியே இங்கு வழிமொழிகிறேன்.

தமிழர் பண்டிகைகளின் போதும் திருமண நிகழ்வுகளின் போதும் மண் கலயத்தை வைத்து வழிபடுவது சிந்து சமவெளி காலம் தொட்டு இன்றும் தொடரும் மரபு, எனவே தான் நல்ல நிகழ்வுகளின் போது மண் கலம் பெருகட்டும் என்று வாழ்த்துவது மரபு, அதுவே பின்பு மண் + கலம் மங்கலம் , பின்பு மங்களம் என்று ஆனதென கூறுகிறார்


அங்காரம் என்றால் நெருப்பு, கரி என்று பொருள். அங்காரகன் அங்காரத்தை அகத்தில் வைத்திருப்பவன் என்று பொருள். இதன் மூல சொல் கரி, காரம் ஆகும். சமஸ்க்ருத பண்டிதர்களிடம் இந்த சொல்லை பிரித்து விளக்கம் கூற இயலுமா என்ற கேள்வி எழுகிறது.

நெருப்பை குறிக்கும் எழுத்தணி :
 உதாரணத்துக்கு கொரியன் மொழியை எடுத்துக்கொள்வோம். திங்கட்கிழமையை Hwa-Yo-il என அழைப்பர். ஒன்றும் புலன் படவில்லையே என்கிறீர்களா?
 Hwa என்றால் கொரியா மொழியில் பொறி என்று அர்த்தம். இது ஆங்கிலத்துக்கு Fire என்று திரிந்தது. சீன மொழியிலிருந்து மருவி வந்ததாக ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. இந்த எழுத்தினை உற்று நோக்கினால் அது விறகுகள் எறிவது போல் தெரியும்.
 எல் என்பது சூரியனையும்(எல்லோன்)  நாளையும் குறிக்கும் தூய தமிழ் சொல்தான். கொரிய மொழியில் எல் என்பது சூரியனையும் நாளையும் குறிக்கும்.

சரி அப்படியென்றால் யோ என்ற சொல்லுக்கு என்ன விளக்கம்?. தமிழில் எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

புளி காய்க்கும் மரத்தை புளியமரம் என்றும் அதிலிருந்து வரும் பழத்தை புளியம்பழம் என்றும்  அழைக்கிறோம்,  அல்லவா? இதில் யம் அல்லது அம் என்று இடையில் வருவது சாரியை. தமிழில் இவ்வாறு சொல்லிற்கு ஏற்ற படி இதை பயன்படுத்துவது உண்டு.

இதே போல் தான் யோ வும், கொரிய மொழியில் சாரியையாக பயன்படுத்தப்படுகிறது.
பொறி நாள் என்பதே Hwa-Yo-il.

உலகத்தின் முதல் விஞ்ஞானிகள் தமிழர்கள் :

சரி இப்பொழுது தமிழுக்கு வருவோம்.

செவ்வாய் என்பதற்கு சிவப்பாய் இருக்கும் கோள்  என்பது பொருள். செவ்விதழ், செங்கல் என சிகப்பு தன்மை உடையவற்றை அவ்வாறு அழைத்தல் இயல்பு. பின்வரும் அறிக்கையை நாசா வெளியிட்டு இருக்கிறது.

Photos from spacecraft show that Mars has a rusty red color. The hue comes from the fact that the surface is *actually* rusty, as in, it's rich in iron oxide


 எந்த வித தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாமலேயே எளிய மனிதனுக்கு விளங்கும் படி செவ்வாய் என்று தமிழர்கள் பகுத்து ஆராய்ந்து அழைத்தனர்.

தமிழ் என்னும் திரை கடலில் திரவியம் தேடி  மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்

அன்புடன்
அன்புக்குமரன் எத்தியரசன் 


1 comment:

  1. தமிழர்கள் அகக்கண்களால் அனைத்தையும் கண்டனர். இன்றும் அகக்கண்களால் கண்டவர்கள் சொல்வவதில்லை, புறக்கண்களால் காண்பவர்கள் ஊர் அறிய பறைசாற்றுகிறார்கள்.

    ReplyDelete