Friday, 2 December 2016

செயல்பாடு மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னோடிகள் ( Senior Most Functional and Technical specialists)

Functional/Technical மென் பொருள் சார்ந்த துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட சொல்லாகும்.


Technical:
இப்பொழுது Technical என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.

இதற்க்கு எப்படியோ சமஸ்க்ருதம் வரை சென்று வேர் சொல் கண்டறிந்துவிட்டார்கள் மேற்கத்தியர்கள். அது தமிழிலிருந்து(தச்சன் ) திரிந்து சென்றதுதான். அதனால் தான்  எழுதும் பொழுது தெச்சனோ என்று எழுதி வாசிக்கும்போது டெக்னோ என்று வாசிக்கின்றோம்.



ஜங்க்கொல்லர்களில் ஒரு வகை கொல்லன்தான் மரக்கொல்லன். மரக்கொல்லனை தச்சன் என்றும் அழைப்பர். முதன் முதல் தோன்றியவன் மரக்கொல்லனே. ஓரறிவுயிருள்ள மரத்தை வெட்டிக்கொல்வதால், அவன் கொல்லன் எனப்பட்டான்; அவன்தொழில் கொல் எனப்பட்டது. வன்பொருள் காணாது மென்பொருள் கண்டால் இதற்க்கு திருத்துவது /அலங்கரிப்பது என்று பொருள் காணலாம். இதனை உணர்ந்துதான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்னும் திரைப்படத்தில் "கொலை எப்படி மன்னா கலையாகும்?" என ஒரு நகைசுவை வசனமும் புகுத்தியிருப்பார்களோ என்னவோ . ஆனால் படத்தில் கூறப்படும் தருவாய் என்னவோ வேறு.



ஆங்கிலத்தில் இது திரிந்து Skill ஆனது.இது சமஸ்கிருதத்திலிருந்து கூட வந்திருக்க வாய்ப்புண்டு. எப்படி தமிழில் இருந்துதான் வந்தது என கூற இயலும்? என  நினைக்கும் அறிவுஜீவிகள் சற்று பின்வரும் சிலப்பதிகார வரிகளை உற்று காண்க.


மரங்கொ ற‌ச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் த‌ற்றே
யெத்திசைச் செலினு ம‌த்திசைச் சோறே.

இதன் வேர்ச்சொல் தக்கணம் அல்லது தை(தையல் தொழில்/இணைப்பதை மற்றும்  மரக்கன்றை  குறிக்கும்) ஆக இருக்கக்கூடும் என அறியப்படுகிறது.

தக்கணம் என்பதற்கு வலப்பக்கம் என்றும் ஒரு பொருள் உண்டு, இது மேற்கத்திய மக்களிடம் Dexter (skilled)என திரிந்தது. வடக்கத்தியர்கள் வலது பக்கத்தை தாஹின்(दाईं) என அழைத்தனர்.

தக்க என்பதற்கு தகுந்த என்றும் ஒரு பொருள் உண்டு. மதிக்கத்தக்க நபர் என்று இன்றும் வழக்கில் உண்டு.



தக்கணம் என்றால் குறைந்த/தாழ்ந்த  அல்லது சிறிய என்றும் பொருள். இன்று தமிழ் வழக்கில் இது இல்லை என்றாலும் தெலுங்கர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் பெருங்குன்றங்களை உடையதாக திகழ்ந்த குமரிக்கண்டம் பின்பு இயற்க்கை சீற்றங்களால் அழிந்தது. ஆதலால் வடக்கே இருக்கும் இமாலய மலைகள் ஓங்கி நிற்க தென்னகம் சரிந்து காணப்பட்டது. ஆதலால் வடக்கத்தியர்கள் தென்னகத்தை ஹிந்தியில் தக்ஷின்(दक्षिण)என அழைத்தார்கள்.

Deccan Plateau என்று நாம் ஆங்கிலத்தில் அழைக்கும் தக்கனநாட்டிற்கும்  இவ்வாறே பெயர் சூட்டப்பட்டது.



 இது போல் சமஸ்க்ருத இலக்கியம் ஏதேனும் இருந்தால் கூட அதன் தொன்மையை உற்று ஆய்தல் அவசியம்.

Functional:
இதன் பொருள் என்ன என்பது நான் விளக்கி கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இது எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதை இப்பொழுது காண்போம்.

மேற்கத்திய மொழி ஆய்வாளர்களின்  ஆய்வின்படி இது Functionem என்னும் இலத்தீன சொல்லிருந்து வந்ததாக கூறப்படுகிறது.. இதன் வேர் சொல் Funct ஆகும். இதன் எச்ச வினை Fungi ஆகும். இதற்க்கு மேல் ஆராய அவர்களுக்கு போதுமான மொழியறிவும் ஆர்வமும் இல்லாததுதான் காரணம்.

Functionem என்பது பூஞ்சணம் என்னும் இலங்கை வழக்கிலிருக்கும் தமிழ் சொல்தான்.
Fungi என்பது பூஞ்சை என்னும் தமிழ் சொல்தான்.

பகரம் ஃபகரமாக திரிந்தது. மேலும் விவரங்களுக்கு தெய்வமும் தேய்த்தீயும் என்ற பதிவை காண்க.

எழுதும் பொழுது  ஃபூஞ்சை(Fungi) என எழுதி ஃபங்கை என்று வாசித்து உச்சரிப்பையே மாற்றினர் மேற்கத்தியர்கள். ஆனால் கொண்டையை மறைக்க மறந்தனர்.



பூஞ்சையானது பல சூழல்களில் வாழ்வதோடு அல்லாது அதன் திறனையும் செயல்பாட்டையும் அருகே இருந்து காணமுடிந்ததால் என்னவோ பின்னர் செயல்பாட்டிற்கு பொதுப்பெயராகவே மாற்றினர்.


Functional /Technical  , இதற்கு வித்திட்டவர்கள் தமிழர்கள் தான்.  பல்லாயிரம் ஆண்டிற்கு முன்பே மூத்த செயற்பாட்டு அறிஞர்களும்(Senior-most functional specialists) தொழிற்நுட்ப அறிஞர்களுமாக(Senior Most Technical Specialists) விளங்கினர் .



தமிழ் என்னும் திரைக்கடலில் திரவியம் தேடி மீண்டும் ஒரு பதிவில் சந்திப்ப்போம்.

- அன்புக்குமரன் எத்தியரசன்

Saturday, 5 November 2016

செவ்வாயும் Tuesdayum

திங்கட்கிழமையை அடுத்து வரும் நாளானது செவ்வாய். உலகத்தில் பெரும்பாலான மொழிகளில் இதனை மார்ஸ்(Mars), ட்யூஸ்(Tuesday) மற்றும் அங்காரகன் என்ற சொல்லிலிருந்தோ அல்லது அதனை சார்ந்த சொல்லால் அழைப்பர்.



போர் கடவுள் என நம்பும் மேற்கத்தியம் (Western references to God Of Wars):

நாம் அன்றாடம் பிரயோகிக்கும் ஆங்கில வார்த்தையான Tuesday வை எடுத்துக்கொள்வோம்.

இதற்க்கு பல மூலங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தாலும் இதன் உறைவிடம்  லத்தீன மொழியாக இருக்க கூடும் dies Martis என பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் திண்ணமாக நம்புகிறார்கள்.
இந்த டேய்ஸ்(Days) எங்கிருந்து வந்தது? தினம்/தேய் தீ என்கிற தமிழ் சொல்லிலிருந்து மறுவியதுதான். மேலும் விளங்க தெய்வமும் Deityum என்கிற தொகுப்பை பார்க்கவும்.

இவ்வாறே மார்ஸும்(Mars) மவ்வ்ர்ட்(போர் கடவுள்) என்னும் லத்தின சொல்லிலிருந்து வந்தது என்று சொற்பிறப்பியல் வல்லுனர்களின் நம்பிக்கை.

தமிழில் போர் கடவுளை செய்யோன் /சேயோன் என்று அழைப்பதுண்டு. இது அல்லாது செந்நிறமுடையோன், அருகன், முருகன், கார்த்திகேயன் என அழைப்பர். சரி இதற்கும் லத்தின மொழியான மாவொர்டுக்கும்(Mavort) என்ன உறவு என்று கேட்கிறீர்களா?

தமிழ் போர் கடவுளுக்கு மற்றோரு எளிய பெயர் உண்டு. அதுவே மாவீரன். இது பின்பு மாவோர்ட் என்று திரிந்தது.

அரேபிய மொழியில் Al-thalatha (மூன்றாவது நாள்) என அழைப்பர்.

நெருப்பை குறிக்கும் வார்த்தைகள்(References to Firy/Fury planet)

தமிழ் மற்றும் குடநாட்டவரின் தமிழ் அல்லாது இந்தியாவின் மற்ற மொழிகளில் சமஸ்க்ரிதத்தில் இருந்து வந்த மங்கள் என்ற சொல்லை சார்ந்தே இருக்கும். இது பற்றி இணையத்தில் கிடைத்த தகவலை அப்படியே இங்கு வழிமொழிகிறேன்.

தமிழர் பண்டிகைகளின் போதும் திருமண நிகழ்வுகளின் போதும் மண் கலயத்தை வைத்து வழிபடுவது சிந்து சமவெளி காலம் தொட்டு இன்றும் தொடரும் மரபு, எனவே தான் நல்ல நிகழ்வுகளின் போது மண் கலம் பெருகட்டும் என்று வாழ்த்துவது மரபு, அதுவே பின்பு மண் + கலம் மங்கலம் , பின்பு மங்களம் என்று ஆனதென கூறுகிறார்


அங்காரம் என்றால் நெருப்பு, கரி என்று பொருள். அங்காரகன் அங்காரத்தை அகத்தில் வைத்திருப்பவன் என்று பொருள். இதன் மூல சொல் கரி, காரம் ஆகும். சமஸ்க்ருத பண்டிதர்களிடம் இந்த சொல்லை பிரித்து விளக்கம் கூற இயலுமா என்ற கேள்வி எழுகிறது.

நெருப்பை குறிக்கும் எழுத்தணி :
 உதாரணத்துக்கு கொரியன் மொழியை எடுத்துக்கொள்வோம். திங்கட்கிழமையை Hwa-Yo-il என அழைப்பர். ஒன்றும் புலன் படவில்லையே என்கிறீர்களா?
 Hwa என்றால் கொரியா மொழியில் பொறி என்று அர்த்தம். இது ஆங்கிலத்துக்கு Fire என்று திரிந்தது. சீன மொழியிலிருந்து மருவி வந்ததாக ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. இந்த எழுத்தினை உற்று நோக்கினால் அது விறகுகள் எறிவது போல் தெரியும்.
 எல் என்பது சூரியனையும்(எல்லோன்)  நாளையும் குறிக்கும் தூய தமிழ் சொல்தான். கொரிய மொழியில் எல் என்பது சூரியனையும் நாளையும் குறிக்கும்.

சரி அப்படியென்றால் யோ என்ற சொல்லுக்கு என்ன விளக்கம்?. தமிழில் எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

புளி காய்க்கும் மரத்தை புளியமரம் என்றும் அதிலிருந்து வரும் பழத்தை புளியம்பழம் என்றும்  அழைக்கிறோம்,  அல்லவா? இதில் யம் அல்லது அம் என்று இடையில் வருவது சாரியை. தமிழில் இவ்வாறு சொல்லிற்கு ஏற்ற படி இதை பயன்படுத்துவது உண்டு.

இதே போல் தான் யோ வும், கொரிய மொழியில் சாரியையாக பயன்படுத்தப்படுகிறது.
பொறி நாள் என்பதே Hwa-Yo-il.

உலகத்தின் முதல் விஞ்ஞானிகள் தமிழர்கள் :

சரி இப்பொழுது தமிழுக்கு வருவோம்.

செவ்வாய் என்பதற்கு சிவப்பாய் இருக்கும் கோள்  என்பது பொருள். செவ்விதழ், செங்கல் என சிகப்பு தன்மை உடையவற்றை அவ்வாறு அழைத்தல் இயல்பு. பின்வரும் அறிக்கையை நாசா வெளியிட்டு இருக்கிறது.

Photos from spacecraft show that Mars has a rusty red color. The hue comes from the fact that the surface is *actually* rusty, as in, it's rich in iron oxide


 எந்த வித தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாமலேயே எளிய மனிதனுக்கு விளங்கும் படி செவ்வாய் என்று தமிழர்கள் பகுத்து ஆராய்ந்து அழைத்தனர்.

தமிழ் என்னும் திரை கடலில் திரவியம் தேடி  மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்

அன்புடன்
அன்புக்குமரன் எத்தியரசன் 


Saturday, 22 October 2016

திங்களும் Mondayum

See you next week, see you on Monday. என்று நாம் அதிகம் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்

அது என்ன Monday? எழுதும் பொழுது மொண்டே என்று எழுதி மண்டே என ஆங்கிலத்தில் உச்சரிக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு  என்று யோசித்ததுண்டா?

தமிழில் நிலவை குறிக்க பல சொற்கள் உண்டு. உதாரணத்திற்கு மதி, சந்திரன்,  நிலவு, திங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

Image result

உலகில் உள்ள மொழிகளை ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலும் திங்கள் கிழமையை / மதிநாளை நிலவின் நாளாக அல்லது நிலவின் பண்பினை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கும். மனிச்சுருக்கமாக சொன்னால்  மூன் அல்லது லூனார் என்ற சொல்லை சார்ந்து வரும். தமிழ் அல்லாது கிழக்கு ஆசிய பகுதிகளில் நிலவின் பண்பினை சார்ந்த பெயர்களை காண முடியும். தமிழர்களை போலவே தங்களது பண்பாட்டின் மீதும் மொழி  மீதும் மிக முக்கியமாக பகுத்தறிவின் மீதும் பற்று இருப்பதனால்தான் என்னவோ.

ஒப்பியல் ஆய்வு:

சரி மூன்(Moon) எப்படி வந்தது. மூன்றாம் பிறை(Crescent) எனப்படும் தமிழ் சொல்லிலிருந்து திரிந்து சென்றிருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்களின் திண்ணமான கருத்து..
அப்படியென்றால் லூனார்(Lunar)? இது லக்னோஸ் என்னும் கிரேக்க சொல்லிலிருந்து தெரிந்ததே  என்று சொற்பிறப்பியல் ஆய்வின் ஊகம். மேற்கத்தியவர்களில் சிலர் இந்த பெயர் சந்திரனை ஆளும் தெய்வத்தின் பெயராகவும் பார்க்கிறார்கள்..
சரி இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம்? ஆம் இலக்கினம் என்னும் தமிழ் சொல்லிலிருந்து தெரிந்ததே லக்னோஸ். ஹிந்திக்கு இது சென்றபோது லக்ன  என்று திரிந்தது. இலக்கினம் என்பது இராசியின் உதயமாயிற்றே(Sun Sign) ! அப்படியிருக்க இராசி(Moon sign) என்ற சொல்லிலிருந்து அல்லவா மற்ற மொழிகளுக்கு சென்றிருக்க வேண்டும்? என எனக்குள்ளும் இந்த கேள்வி எழுந்தது. சற்று ஆராய்ந்த பின் புலன் பட்டது.

சந்திர லக்கினம் ( சாதகத்தின் முதல் வீடாக அறியப்படும் )  நினைவகம் , மன செயல்பாட்டை மற்றும் பெண்ணின் வளம் முதலியவற்றை தீர்மானிக்க உதவுகின்றன என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. பகுத்து அறிந்த பின் வந்ததே இந்த நம்பிக்கை

இந்த நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று இன்றய நவ நாகரீக போலி மேற்கதித்ய  மக்கள்  தங்களை 21ஆம் நூற்றாண்டு மனிதர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் மக்கள்தான் சிலர் செய்யும் சித்த சுவாதீன  செயல்களை கண்டு  lunatic/lunacy என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர், இந்த lunatic எப்படி வந்தது? சந்திரனின் நிலையை பொறுத்து மனிதர்களின் மன நிலை மாறும் என்பதனால் தான் நிலவின் பெயரான  lunar என்ற வார்த்தையில் இருந்து lunacy மற்றும் lunatic என்று அழைக்க தொடங்கினர்.

 மார்கழி மாதத்தை மார்கழி திங்கள் என்றும் நிலாவை மதி என்றும் குறிக்கும் வைரமுத்துவின் அழகான இந்த பாடலை உற்று கவனித்தால் நிலவினை இரு பொருளோடு புகுத்தியது புலன் படும்.


இளையராஜா ஒரு படிக்கு மேல் சென்று நிலவின் பல பரிமாணங்களை ஒரு பாட்டில் அடைத்திருப்பார்.
இசையில் தொடங்குதம்மா என்ற அந்த ஹே ராம் என்னும் திரைப்படத்தில் வரும்.

 Month என்னும் ஆங்கில சொல்லும் moon இலிருந்து வந்ததே.

தமிழிலும் அப்படித்தான். ஒரு திங்கள் 27 நாட்களை குறிக்கும். இன்று நமது தினசரி  வழக்கில் திங்கள் மறைந்து மாதம் என்று (மதியில் இருந்து திரிந்து சென்றது  ) கூறுகின்றோம். நாம் மறந்தாலும் நமது அருமை கன்னடர்கள் இன்றும் பேச்சு வழக்கில் திங்களு என்ற தமிழ் சொல்லால் தான் மாதத்தினை அழைக்கின்றனர்.
இதனை மேலும் விளக்கும் வகையில் கீழ்கண்ட காணொளியை 6:11 தொடங்கி 6:55 வரை கண்டால் நான் சொல்வது விளங்கும்.





அரேபிய நாடுகளில் மிக வசதியாக திங்கள் கிழமையை al-ithnayn (இரண்டாவது நாள்) என்று அழைப்பர். 

 கொரியனில் இருக்கும் தமிழ் (The Korean connection):


சரி கிழக்கு ஆசியாவில் நமக்கு புரியாதவாறு ஏதோ இருக்குமே அதுவும் தமிழிலிருந்து சென்றதா? ஆம் என்பதே எனது  திண்ணமான பதில்.

உதாரணத்துக்கு கொரியன் மொழியை எடுத்துக்கொள்வோம். திங்கட்கிழமையை Wol-Yo-il என அழைப்பர். ஒன்றும் புலன் படவில்லையே என்கிறீர்களா?
ஒள் என்பது ஒளியை குறிக்கும் தூய தமிழ் சொல்தான். கொரிய மொழியில் ஒள் என்பது நிலவையும் நிலவொளியையும்  குறிக்கும்.
எல் என்பது சூரியனையும்(எல்லோன்)  நாளையும் குறிக்கும் தூய தமிழ் சொல்தான். கொரிய மொழியில் எல் என்பது சூரியனையும் நாளையும் குறிக்கும்.

சரி அப்படியென்றால் யோ என்ற சொல்லுக்கு என்ன விளக்கம்?. தமிழில் எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

புளி காய்க்கும் மரத்தை புளியமரம் என்றும் அதிலிருந்து வரும் பழத்தை புளியம்பழம் என்றும்  அழைக்கிறோம்,  அல்லவா? இதில் யம் அல்லது அம் என்று இடையில் வருவது சாரியை. தமிழில் இவ்வாறு சொல்லிற்கு ஏற்ற படி இதை பயன்படுத்துவது உண்டு.

இதே போல் தான் யோ வும், கொரிய மொழியில் சாரியையாக பயன்படுத்தப்படுகிறது.
ஒளியை(நிலவொளி) தரும் நிலவு நாள் என்பதே Wol-Yo-il.

 தமிழ் முதற்றாய மொழிதான் என்பதை விளக்க கொரியா வரை சென்ற நமக்கு சமஸ்க்ருத மோகத்தால் சோம வாரம் என்று அழைக்கும் கூட்டத்திற்கு என்ன பதில் ?
இணையத்தில் கிட்டியதை அப்படியே இங்கு இடுகின்றேன்,
இந்து தொன்மவியலின் அடிப்படையில் சோம பானம் (சமஸ்கிருதம்: सोम, சோமா) என்பது ஆரியர்கள் அருந்தும் பானமாகும். மயக்கம் தரும் பானங்களில் வேதகால மக்களிடையே மிக விரிவாக பரவி இருந்தது.

சந்திரக்கடவுளாகிய சோமன் வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் சோம தாவரம் என்றுள்ளதாலும் இந்த பானம் சோம பானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும், மயக்கம் தர வல்லதாகவும் சித்தரிக்கப்படுகிறது

ஆக ஒரு கடவுளின் பெயராலும் மயக்கம் தரும் தாவரத்தின் பெயராலும் திங்கட்கிழமையை அழைக்கின்றனர். இது தமிழில் இருந்து சென்றதா என்பதிற்கு என்னிடம் பதில் இல்லை, எனினும் இதில் பகுத்தறிவுத்தன்மை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது ?.

உலகத்தின் முதல் விஞ்ஞானிகள் தமிழர்கள் :

இப்பொழுது தமிழுக்கு வருவோம். ஏன் நாம் திங்கள் என்று அழைக்கிறோம். திம் + கள்.  திம்மை கல்(Ball of Rocks) என்பதன் சுருக்கம் தான் திங்கள்.
மிகுந்த தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பிறகு ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின் வெளிப்பாடாக கீழே உள்ள செயதியை வெளியிட்டு இருக்கிறார்கள் மேற்கத்தியர்கள்.

 The lunar highlands are mostly made of anorthosite. Breccias are igneous rocks composed of pieces of older rocks. As meteoroids crash onto the Moon surface, rocks are broken into many pieces.

எந்த தொழில் நுட்ப வளர்ச்சியின் துணை இல்லாமலேயே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு  இது புலன் பட்டு எளிய மனிதனுக்கு விளங்கும் வகையில் திங்கள் என்று அழைத்திருக்கிறான்.

சரி ஏதோ ஒரு கிழமைக்கு இது தற்செயலாக அமைந்துவிட்டது என்று வந்தேறிகளின் மூளை சலவைக்கு உள்ளாகிய மனதில் ஐயம் இருப்பின் எனது அடுத்த பதிப்புகளில் மற்ற கிழமையின் விளக்கத்தோடு   சாட்டை அடியாக வரும்..

தமிழ் என்னும் திரை கடலில் திரவியம் தேடி  மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்

அன்புடன்
அன்புக்குமரன் எத்தியரசன்

Saturday, 8 October 2016

சம்பளமும் Salaryum

Salary கிரெடிட் ஆயிடிச்சா ? எனக்கு ஆயிடிச்சு. என்பது போன்ற உரையாடல்களை   இன்று பொதுவாக பல இடங்களில் குறிப்பாக அலுவலங்களில் கேட்கலாம்.

நாம் வேலை செய்ததற்கான ஊதியம் / சம்பளம் நமக்கு கிட்டும் தருணம் மகிழ்ச்சிதானே!



எனினும் நம்மில் பல பேர் salary என்று தான் சொல்கிறோம். சம்பளம் என்று சொல்ல வரவில்லை.. இதை உலகமயமாக்கல் என்று சொல்வதா? அல்லது மேற்கத்திய ஏகாதிபத்தியம் என்று சொல்வதா? என்பது தனி வாதம்.
சரி சம்பளம் என்றால் என்ன.

பாவாணர் உரையிலிருந்து அப்படியே மீண்டும் பதித்துள்ளேன் :

பழங்காலத்தில் சம்பளம் கூலமும்( கூலமாகக் கொடுக்கப்படுவது கூலி.) உப்புமாகக் கொடுக்கப் பட்டது. கூலம் தானியம்.5 கூலத்திற் சிறந்தது நெல்லாதலின், நெல்வகையிற் சிறந்த சம்பாவின் பெயராலும், உப்பின் பெயராலும், சம்பளம் என்னும் பெயர் உண்டாயிற்று. சம்பும் அளமும் சேர்ந்தது சம்பளம். சம்பு என்பது சிறந்த நெல்வகைக்கும் சிறந்த கோரை வகைக்கும் பொதுப்பெயர்.

ஓங்கிவளர்ந்த சம்பாநெற்பயிரும் சம்பங்கோரையும் ஒத்த தோற்றமுடையனவா யிருத்தல் காண்க.நெல்லைக் குறிக்கும் சம்பு என்னும் பெயர் இன்று சம்பா என வழங்குகின்றது. உகரவீற்றுச் சொற்கள் ஆகார வீறு பெறுவது இயல்பே. எ-டு: கும்பு - கும்பா, தூம்பு - தூம்பா, குண்டு - குண்டா.கும்புதல் = திரளுதல்.
அளம் என்பது உப்பு. உப்பு விளைப்போர் அளவர் எனப்படுதல் காண்க.
அளம் என்னும் சொல் தன் பொருளிழந்து ஈறாக மாறியபின், உப்பைக் குறிக்க உம்பளம் என்றொரு சொல் வேண்டியதாயிற்று. உப்பைச்6 சம்பளப் பகுதியாகக் கொடுக்கும் வழக்கம் நின்றுவிடவே, உம்பளம் என்னும் சொல்லும் அப் பொருளில் வழக்கு வீழ்ந்து, மானியமாகக் கொடுக்கும் நிலத்திற்குப் பெயராக ஆளப்பட்டது. உம்பு, உப்பு.
‘உப்புக்கு உழைத்தல்’, ‘உப்பைத் தின்னுதல்’ என்னும் வழக்குகளையும், “உப்பிட்டவரை உள்ளளவும் நினை’’ என்னும் பழமொழியையும் நோக்குக
உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். பேரளம், கோவளம் (கோ அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள் என்கிறார்.

பொருட்களை வைத்து பரிவர்த்தனை(commodity - commodity trading) செய்யும் காலத்தின் பொது இந்த சொல் வந்திருக்கக்கூடும்.

சரி Salary எப்படி வந்தது?  Salt(saline)  என்னும் சொல்லிலிருந்து வந்தது.  Soldier's pay, which was given partly in salt, - wages".

Salt என்பது  Sail என்னும் சொல்லிருந்து வந்திருக்கக்கூடும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இது சலதி(கடல்)/சலம் என்ற தமிழ் சொல்லின் திரிபே.

எவ்வளவு காசு கிடைத்தாலும் அந்த காகிதத்தை நாம் சாப்பிட முடையாது அல்லவா, நமது அன்றாட உணவில் அரிசி இல்லை என்றால் என்ன? அதற்க்கு பதில் பல மாற்று உணவு இருக்கிறதே என்ற எண்ணம் இருந்தால், அது வந்தேறிகள்  செய்த மூளை சலவை தான்.

நல்ல சாப்பாடு உணவில் வேண்டும் என்றால், அரிசி வேண்டும். அரிசி உற்பத்தி வேண்டும் என்றால், சம்பா போன்ற நெல்லின் சாகுபடி ஆகுவது முக்கியம். அதற்க்கு நீர் வேண்டும். வளமான நிலமும் வேண்டும். நீரை இன்று காசு கொடுத்து வாங்குகொறோம், நெல் சாகுபடிக்கு நீர் தர மறுக்கிறது அண்டை மாநில அரசு. நிலமோ மீத்தேன் எடுப்பதற்கும், பன்னாட்டு நிறுவனத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் ஏலம் விடப்பட்டு இருக்கிறது. 





நாம் இயற்க்கை எய்தும் போது  நமக்கு பிறகு வரும் சந்ததியினருக்கு என்ன விட்டுவிட்டு செல்கிறோம் என்று நாம் சற்று எண்ணி பார்க்க வேண்டும். ஆடம்பரமும் வசதியும் எதை நோக்கி செல்கிறது  என்பதை சற்று பின்னோக்கி பார்த்தல் அவசியம் .




அன்புடன்,
அன்புகுமாரன் எத்தியரசன்

Friday, 30 September 2016

தெய்வமும் Deityum

கடவுள் என்ற ஒருவர் இருப்பாராயின் அக்கடவுளுக்கே புலன்படாதவாறு இன்று பல கடவுளின் பெயரகள் உள்ளன.
தமிழில் தெய்வம், பகவன், இறைவன், தேவன், கடவுள், சுவாமி, சாமி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவற்றுள் தெய்வம் என்ற சொல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, கற்காலத்தில் உள்ள மனிதன்  இருள் நீங்கி ஒளியை தரும் கதிரவனை/ சூரியனை தெய்வமாக வணங்கினான்,
அதனால் தான்  ஞாயிறு(ஞானம் இருக்கும் கோள்)  என்ற சொல்லும் வந்தது. இன்று நாம் ஆங்கிலத்தில் Please enlighten me, Could  you please throw some light on this? என்று சொல்வது இதனால் தான்.


 


சிட்டிசன் என்னும் திரைப்படத்தில் சிக்கி முக்கி கல்லு மோதுதே என்று ஒரு பாடல் உண்டு,



இதே போன்று தாமரையின் அழகான வரியில் நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே என்று பாடல்வேட்டையாடு விளையாடு  என்னும் திரைப்படத்தில் வரும்.

சிக்கி முக்கி என்பது வெறும் சந்ததத்துக்காக நிரப்பப்பட்டது அல்ல. சிக்கி முக்கி கல் என்றால் என்ன? நெருப்பை உண்டாக்கக் கூடிய கல் வகைக்கு இவ்வாறு பெயர் வைத்தார்கள், இந்த கற்களை தேய்ப்பதனால் தீ பொறி உண்டாகும். இவ்வாறு தேய்த்தீ என்று திரிந்து ஆங்கிலத்துக்கு சென்றது. சரி அப்படியென்றால் ஆங்கிலத்தில் எப்படி நெருப்புக்கு Fire என்று பெயர் வந்தது. அதற்க்கு ஆய்வாளர்கள் கூறும் காரணம் fuery என்ற ஜெர்மனிய சொல்லிருந்து வந்திருக்கக்கூடும் என்று. அது பொறி என்ற தமிழ் சொல்லிருந்து திரிந்து சென்றதே,
பொறி எப்படி fuery ஆனது என்பதை உணர்த்த ஓர் எடுத்துக்காட்டுக்கு சற்று மலையாள கரையில் செல்வோமேயானால் அங்கே மனைவிக்கு  பாரியா என்ற சொல் உண்டு. ஆனால் கோட்டயம் பகுதியில் Faaria என்றும் அழைப்பர்.எனக்கு பிடித்த ஒரு மலையாள படத்தில் வரும் இந்த காட்சியை கண்டால் நான் சொல்வது புலன் படும்.





பாவாணரின் கூற்று :


தேய் + = தேய்வு - தேவு - தே - தீ.
தேய்வு + அம் - தேய்வம - தெய்வம்
தேய்வம் - தேவம் - தேவன்

தெய்வம் என்பது முதலாவது நெருப்பையும் பின்பு சிவத்தையுங் குறிக்கும்.

(திருவாசக விரிவுரை காண்க.)

சிவ + ம் = சிவம் - சிவன் - சிவை.

சரி இப்படி இருக்க அண்மையில் தோன்றிய ஹிந்தியில் ஆக் என்கிறோமே. அது ஏன் ?   அக்னி என்ற சொல்லிலிருந்து முளைத்ததுதான் ஆக் மற்றும்  ignite என்ற ஆங்கில சொல்லும்.
அக்னி என்பது சமஸ்க்ரிதம் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்படி இருக்க, இந்த சொல்லுக்கு இங்கே என்ன வேலை? தமிழிலுள்ள  அழனி என்ற சொல் தான் அக்னி என்று திரிந்து சமஸ்க்ரிதத்திற்கு சென்றது. இதற்க்கு காரணம் வேண்டுமா என்ன? தமிழர் மற்றும் குடநாட்டவர் அல்லாது வேறு யாராலும் 'ழ' கரத்தை எளிதில் உச்சரிக்க முடியாது. 

Sanskrit - Agni
Hindi/Marathi - Aag
Bengali - Aguna
Punjaabi - Aga
Gujarati - Phāyara
Telugu - Nippu
Kannada - Benki
French - Feu
Greek - Fotia
Italian - Fuoco
Latin - Ignis
Russian - Ogon
Irish - Dóiteáin
Dutch - Brand
Poland - Pozar


 தமிழ் என்னும் திரை கடலில் திரவியம் தேடி மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்
- அன்புக்குமரன் எத்தியரசன்


Saturday, 24 September 2016

கால் திரிந்து Column ஆனது

வந்தேறிகள் ஆண்டுவிட்டு சென்றும் கூட ஆண்டவரின் மொழியை நாம் பல காரணங்களுக்காக பற்றி கொண்டுள்ளோம்.
கட்டமைப்பு பொறியியலில் வரும் Column என்னும் சொல் தமிழிலிருந்து  திரிந்து சென்றது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நிற்கும் போதும் நடக்கும் போதும் நமது கட்டமைப்பான உடலை தாங்கி கொண்டு செல்லும் கால்.



இதை மனதில் கொண்டு பின்பு தான் கட்டிய கட்டிடத்தை தாங்க கால் போன்ற தூணை அமைத்தான்.
இன்றும் பாண்டியநாட்டில் இருக்கும் ஒரு கோவிலை ஆயிரம் கால் மண்டபம் என்று தான் கூறுகின்றோம்.




நான்கு கால்களை தூணாக கொண்டிருக்கும் இருப்பினை நாற்காலி என்கின்றோம்.

மேலும் காலின் பல தன்மைகளை கொண்டு பல தமிழ் சொற்கள் உருவாகின என்று பாவாணர் உரையில்  உள்ளது.அவை கீழ் காணலாம்.

அகாலம். அ + காலம்.

காலம்: கால்+அம்=காலம். அம் சாரியை. கால் உடம்பின் காற்பாகமாகிய உறுப்பு.
கால் = 1. leg
2. தூண், கால் போல்வது
3. canal - கால்போல நீண்டோடுவது
4. வம்சம் - கால்போலத் தொடர்வது
5. காற்று - கால்போலச் சென்று வீசுவது
6. time - கால்போல நீண்டு செல்வது
தமிழ் என்னும் திரை கடலில் திரவியம் தேடி மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்
- அன்புக்குமரன் எத்தியரசன்