Monday, 27 March 2017

வியாழனும் Thursdayum

தமிழர்கள் நாகரீகத்தில் மட்டும் அல்ல, பகுத்தறிதலிலும் முன்னோடிகளே.

வியாழக்கிழமையை உலகத்தில் அநேக மொழிகளில் குரு, ஜுவே மற்றும் ப்ரஹஸ்பதி என்ற சொற்களை சார்ந்து பெயரிடப்பட்டிருக்கும்.
கிழக்கு ஆசிய பகுதிகளில் மற்றும் மத்திய கிழக்கு பகுத்தலில் சற்று வேறுபட்டு இருக்கும்.

தொர்ஸ், குரு, ஜூவி மற்றும் ப்ரஹஸ்பதி இவை இணைத்தும் கடவுளை சார்ந்த பெயர்களே. பிரம்மன், சரஸ்வதி, கடவுளின் அரசர், ஆகாயத்தின் கடவுள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மனித ஆற்றலை வெளி கொண்டு வந்து இன்று பல தொழில்நுட்ப வளர்ச்சிகளை பெற்றிருந்தும் இதன் பெயர்களின் பின்னணியை ஆராயாமல் இந்த பெயர்களை ஏற்று பயன் படுத்தி கொண்டிருக்கிறோம்.

The Korean/Chineese Connection
 
வியாழ கிழமையை  கொரிய மொழியில் மோக்-யோ-இல்(목요일) என்று அழைப்பர்.

இல் என்பது கதிரவனையும் தினத்தையும்  குறிக்கும். தமிழிலும் எல்(எல்லோன் ) என்றால் கதிரவனையும் நாளையும்  குறிக்கும்.
மோக் என்றால் கொரியா மொழியில் மரம் மற்றும் மரக்கட்டையை குறிக்கும். இதை மொக்கை/மொக்கு என்ற தமிழ் சொல்லிலிருந்து தெரிந்ததே. மரமானது ஆகாசத்திற்கு அப்பால் படர்ந்து இருக்கும் எளிதில் பற்றிக்கொள்ள கூடிய ஒரு வித காற்றிற்கும் மூல காரணம் என்று பண்டைய சீனர்கள் நம்பினர்.
பகுத்தறிவு இருப்பது போல் தெரிந்தால் சீன நாட்டின் முன்னோடிகளை பாராட்டத்தான் வேண்டும்.

இப்பொழுது தமிழுக்கு வருவோம்

வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு வேறுபாட்டுடன் வியாழன் என்று அழைக்கிறோம்.
வியல் + ஆழம். வியல் என்பது அகலம் மற்றும் விரிவை குறிக்கும். ஆழம் என்பது விட்டத்தை குறிக்கும்.  இதனை நிரூபணம் செய்யும் வகையில் செயற்கை கோள்களை அனுப்பி பல் வேறு தொழில்நுட்பங்களின் உதவியோடு பின் வரும் தகவலை சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டு உள்ளது.


Jupiter is the largest planet in the solar system. It is approximately 143,000 kilometers (about 89,000 miles) wide at its equator. Jupiter is so large that all of the other planets in the solar system could fit inside it. More than 1,300 Earths would fit inside Jupiter.



அகண்டு விரிந்து மிகுந்த ஆழத்துடன் காணப்படுவதால் பகுத்து அறிந்து மொழிகூற்றுகளை வழங்கி சித்தர்களாய் பகுத்தறிவாளர்களாய் விளங்கிய தமிழர்கள் வியாழன் என்று அழைத்தனர் .

இடம் பொருள் ஏவல் கருதி இன்று அதிகம் பயன்படுத்தாமல் போயினும் வியாழன் என்று எவரேனும் அழைத்தால் மதித்து ஏற்று கொள்வோமே!! மனிதநேயத்துக்கே முன்னோடிகளாவர் நம் தமிழர்கள்.

Chip/Shipum சிற்பமும்

Ship(ஷிப்) என்னும் ஆங்கில சொல்லின் பயன்பாடு இரு வேறு அர்த்தங்களால் அறியப்படுகிறது.
ஆங்கிலத்தை கொண்டு இதன் அர்த்தத்தை அறிதல் என்பது இயலாத ஒன்று. காரணம் இது தமிழில் இருந்து வந்ததே.
முதலில் நமக்கு தெரிந்த Ship(ஷிப்) என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இது ஜெர்மானிய சொல்லாகிய ஸ்கப்பா என்னும் சொல்லில் இருந்து வந்தது என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. இது கப்பல் என்னும் தமிழ் சொல்லில் இருந்து வந்ததே.

இப்படியிருக்க Friendship என்கிறோமே, நட்புக்கும் கப்பலுக்கு என்ன உறவு?



Friendship இல் வரும் Ship என்பது ஒருவரது திறமையை குறிக்கும். இது சிற்பம்/சிற்பி  என்னும் தமிழ் சொல்லில் இருந்து வந்ததே. சிற்பத்தை வடிவமைப்பவன் சிற்பி.  தேர்ந்த ஒருவரால் மட்டுமே சிற்பத்தை வடிவமைக்க முடியும். எனவேதான் என்று பின்னொட்டாய் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்.  பின்வரும் ஆங்கில சொற்களில் வரும் Ship திறனையே குறிக்கும்
  • flagship.
  • hardship.
  • township.
  • lordship.
  • kingship.
  • starship.
  • headship.
  • wardship.
சிப் (Chip)என்ற சொல்லும் சிற்பி என்ற தமிழ் சொல்லிலிருந்து மருவியது தான். கல்லில் இருந்து சில்லு சில்லாய் வேண்டாத பாகங்களை செதுக்கி எடுப்பதன் மூலம் ஒரு சிற்பம் தோன்றுகிறது. 

Tuesday, 7 March 2017

ஓசையற்ற ரகரம் (The Silent 'R' in Girl)


ஆங்கிலத்தில் அநேகமான சொற்களில் R என்னும் எழுத்து silent என்ற பெயரில் ஓசையற்று உச்சரிக்கப்படுவதில்லை.
ஒரு உதாரணத்திற்கு Girl ஐ எடுத்துக்கொள்வோம்.
நம்மில் முதன் முதலில் ஆங்கிலம் படிப்பவர்கள் கேர்ள் என்று உச்சரிப்பர், அப்படி உச்சரிக்கும் போது  அது கேர்ள் இல்லை, கேள் என்று சரி செய்வது உண்டு. இதன் பின்னணி தான் என்ன? வினவினால் அதெல்லாம் அப்படிதான் என்று அறியாமையால் நம் வாயை அடைத்துவிடுவார்கள்.





Girl என்பது gurwilon என்ற மூல ஜெர்மானிய சொல்லிலிருந்து வந்தது என்று மொழி ஆய்வாளர்களின் கருத்து. இது குருளை என்னும் தமிழ் சொல்லிலிருந்து திரிந்து சென்றதே.
தமிழில் ஒருசார் விலங்கினகுட்டிகளையும் இருப்பால் இளம் குழந்தைகளையும் குருளை என்று அழைப்பது வழக்கம். இதன் மூலச்சொல் குறு/உரு ஆகும். வேர் சொல் உல் ஆகும். பின்பு என்று திரிந்து ஆங்கிலத்தில் சென்று இன்று சிறுமிகளை அழைப்பதற்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்.

பின்வரும் குறுந்தொகை பாடல்  இதன் பயன்பாட்டை எடுத்துரைக்கும் ஒரு சான்று.

குறுந்தொகை பாடல்: 47 (கருங்கால்)

தோழி கூற்று

    கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
    இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
    எல்லி வருநர் களவிற்கு
    நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.

ஆக நம் மொழியிலிருந்து திரிந்து இன்று அறையும் குறையுமாக  அண்மையில் முளைத்த மொழிக்கு இதுதான் உச்சரிப்பு என்று நமக்கே பாடம் கற்ப்பிக்கின்றனர். தோற்ற வடிவத்தை மாற்றினாலும் கொண்டையை மறைக்க மறந்து விட்டனர். அதனால் தான் இன்று கேள் என்று உச்சரித்தாலும் கேர்ள் என்றே எழுதுகின்றனர்.

இனி யாரவது கேர்ள் என்று உச்சரித்தால் எல்லி நகையாடாமல் பணிவாகவே திருத்தலாமே.

தமிழ் என்னும் திரைக்கடலில் திரவியம் தேடி மீண்டும் ஒரு பதிவில் சந்திப்ப்போம்.
- அன்புக்குமரன் எத்தியரசன்