Functional/Technical மென் பொருள் சார்ந்த துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட சொல்லாகும்.
Technical:
இப்பொழுது Technical என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.
இதற்க்கு எப்படியோ சமஸ்க்ருதம் வரை சென்று வேர் சொல் கண்டறிந்துவிட்டார்கள் மேற்கத்தியர்கள். அது தமிழிலிருந்து(தச்சன் ) திரிந்து சென்றதுதான். அதனால் தான் எழுதும் பொழுது தெச்சனோ என்று எழுதி வாசிக்கும்போது டெக்னோ என்று வாசிக்கின்றோம்.
ஜங்க்கொல்லர்களில் ஒரு வகை கொல்லன்தான் மரக்கொல்லன். மரக்கொல்லனை தச்சன் என்றும் அழைப்பர். முதன் முதல் தோன்றியவன் மரக்கொல்லனே. ஓரறிவுயிருள்ள மரத்தை வெட்டிக்கொல்வதால், அவன் கொல்லன் எனப்பட்டான்; அவன்தொழில் கொல் எனப்பட்டது. வன்பொருள் காணாது மென்பொருள் கண்டால் இதற்க்கு திருத்துவது /அலங்கரிப்பது என்று பொருள் காணலாம். இதனை உணர்ந்துதான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்னும் திரைப்படத்தில் "கொலை எப்படி மன்னா கலையாகும்?" என ஒரு நகைசுவை வசனமும் புகுத்தியிருப்பார்களோ என்னவோ . ஆனால் படத்தில் கூறப்படும் தருவாய் என்னவோ வேறு.
ஆங்கிலத்தில் இது திரிந்து Skill ஆனது.இது சமஸ்கிருதத்திலிருந்து கூட வந்திருக்க வாய்ப்புண்டு. எப்படி தமிழில் இருந்துதான் வந்தது என கூற இயலும்? என நினைக்கும் அறிவுஜீவிகள் சற்று பின்வரும் சிலப்பதிகார வரிகளை உற்று காண்க.
மரங்கொ றச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
யெத்திசைச் செலினு மத்திசைச் சோறே.
இதன் வேர்ச்சொல் தக்கணம் அல்லது தை(தையல் தொழில்/இணைப்பதை மற்றும் மரக்கன்றை குறிக்கும்) ஆக இருக்கக்கூடும் என அறியப்படுகிறது.
தக்கணம் என்பதற்கு வலப்பக்கம் என்றும் ஒரு பொருள் உண்டு, இது மேற்கத்திய மக்களிடம் Dexter (skilled)என திரிந்தது. வடக்கத்தியர்கள் வலது பக்கத்தை தாஹின்(दाईं) என அழைத்தனர்.
தக்க என்பதற்கு தகுந்த என்றும் ஒரு பொருள் உண்டு. மதிக்கத்தக்க நபர் என்று இன்றும் வழக்கில் உண்டு.
தக்கணம் என்றால் குறைந்த/தாழ்ந்த அல்லது சிறிய என்றும் பொருள். இன்று தமிழ்
வழக்கில் இது இல்லை என்றாலும் தெலுங்கர்கள் இந்த வார்த்தையை
பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் பெருங்குன்றங்களை உடையதாக திகழ்ந்த
குமரிக்கண்டம் பின்பு இயற்க்கை சீற்றங்களால் அழிந்தது. ஆதலால் வடக்கே
இருக்கும் இமாலய மலைகள் ஓங்கி நிற்க தென்னகம் சரிந்து காணப்பட்டது. ஆதலால்
வடக்கத்தியர்கள் தென்னகத்தை ஹிந்தியில் தக்ஷின்(दक्षिण)என அழைத்தார்கள்.
Deccan Plateau என்று நாம் ஆங்கிலத்தில் அழைக்கும் தக்கனநாட்டிற்கும் இவ்வாறே பெயர் சூட்டப்பட்டது.
இது போல் சமஸ்க்ருத இலக்கியம் ஏதேனும் இருந்தால் கூட அதன் தொன்மையை உற்று ஆய்தல் அவசியம்.
Functional:
இதன் பொருள் என்ன என்பது நான் விளக்கி கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இது எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதை இப்பொழுது காண்போம்.
மேற்கத்திய
மொழி ஆய்வாளர்களின் ஆய்வின்படி இது Functionem என்னும் இலத்தீன
சொல்லிருந்து வந்ததாக கூறப்படுகிறது.. இதன் வேர் சொல் Funct ஆகும். இதன்
எச்ச வினை Fungi ஆகும். இதற்க்கு மேல் ஆராய அவர்களுக்கு போதுமான
மொழியறிவும் ஆர்வமும் இல்லாததுதான் காரணம்.
Functionem என்பது பூஞ்சணம் என்னும் இலங்கை வழக்கிலிருக்கும் தமிழ் சொல்தான்.
Fungi என்பது பூஞ்சை என்னும் தமிழ் சொல்தான்.
பகரம் ஃபகரமாக திரிந்தது. மேலும் விவரங்களுக்கு தெய்வமும் தேய்த்தீயும் என்ற பதிவை காண்க.
எழுதும்
பொழுது ஃபூஞ்சை(Fungi) என எழுதி ஃபங்கை என்று வாசித்து உச்சரிப்பையே
மாற்றினர் மேற்கத்தியர்கள். ஆனால் கொண்டையை மறைக்க மறந்தனர்.
பூஞ்சையானது
பல சூழல்களில் வாழ்வதோடு அல்லாது அதன் திறனையும் செயல்பாட்டையும் அருகே
இருந்து காணமுடிந்ததால் என்னவோ பின்னர் செயல்பாட்டிற்கு பொதுப்பெயராகவே
மாற்றினர்.
Functional /Technical , இதற்கு வித்திட்டவர்கள் தமிழர்கள் தான். பல்லாயிரம் ஆண்டிற்கு முன்பே மூத்த செயற்பாட்டு அறிஞர்களும்(Senior-most functional specialists) தொழிற்நுட்ப அறிஞர்களுமாக(Senior Most Technical Specialists) விளங்கினர் .
தமிழ் என்னும் திரைக்கடலில் திரவியம் தேடி மீண்டும் ஒரு பதிவில் சந்திப்ப்போம்.
- அன்புக்குமரன் எத்தியரசன்